நாற்பதாயிரம் பாடலுக்கு மேல் பாடி உலக சாதனை படைத்த பாடல் சக்கரவர்த்தியின் பிறந்த தினம் இன்று!

0
138

சுமார் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் கடந்த 1946 ஆம் வருடம் ஜூன் மாதம் நான்காம் தேதி ஆந்திர பிரதேச மாநிலத்தில் பிறந்தார் என்று சொல்லப்படுகிறது.

1966ம் வருடம் கோதண்டபாணி இசையமைத்த தெலுங்குத் திரைப்படத்தில் முதன் முறையாக எஸ்பிபி ஒரு பாடலை பாடியிருக்கிறார். இந்த நிலையில், கடந்த 2016ஆம் வருடம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது எஸ்பிபி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

தமிழ் மொழியில் முதன் முதலாக சாந்தி நிலையம் என்ற திரைப்படத்தில் இவர் பாட தொடங்கியிருக்கிறார். அதனை அடுத்து எம் எஸ் விஸ்வநாதன், இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான் ,யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் என்று அனைத்துத் தரப்பு இசையமைப்பாளர்களின் இசையிலும் இவர் பாடி இருக்கின்றார்.

உலக அளவில் சாதனை படைத்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு கடந்த 2001ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது, அதேபோல கடந்த 2011ஆம் ஆண்டு இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. அதோடு கலைமாமணி விருது ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது, ஆந்திர அரசின் நந்தி விருது போன்றவற்றை 25 முறையும் பாடகர் எஸ் பி பி பெற்றிருக்கிறார். 1960 களில் ஆரம்பித்த இவருடைய இசை பயணமானது அரை நூற்றாண்டை தாண்டி இன்றும் அதே சுறுசுறுப்புடன் வலம் வந்துகொண்டிருக்கிறது இவர் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி இயற்கை எய்தினார் என்ற அதிர்ச்சி செய்தி வெளியானது.