SpaceX: “ஸ்பேஸ் எக்ஸ்” நிறுவனத்தின் ஏவுகணை வெடித்து சிதறி இருக்கிறது.
உலக பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் எலான் மஸ்க் எக்ஸ் தளம் மற்றும் டெஸ்லா போன்ற முன்னணி நிறுவனங்களை நடத்தி வருகிறார். எலான் மஸ்கின் “ஸ்பேஸ் எக்ஸ்” என்ற நிறுவனம் விண்வெளி ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் “ஸ்பேஸ் எக்ஸ்” நிறுவனத்தின் ஏவுதளம் அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் உள்ளது.
இந்த ஏவுதளத்தில் தொடர்ந்து ஏவுகணைகளை ஏவி சோதனைகளை செய்து வருகிறது. அந்த வகையில் 7 வது முறையாக ஸ்டார்ஷிப் ராக்கெட்டை விண்ணில் ஏவியது. விண்ணில் ஏவப்பட்ட எட்டு வினாடிகளில் இந்த ஏவுகணை வெடித்து சிதறி இருப்பது ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தொலைத்தொடர்பு மேலாளர் டான் ஹூட் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், நாம் எந்த அளவுக்கு சோதனை செய்கிறோமோ அந்த அளவிற்கு நாம் கற்றுக் கொள்வோம் இதுவே நாம் வெற்றி பெற காரணமாக அமையும் என தெரிவித்து இருக்கிறார். டார்ஷிப் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட பிறகு பூஸ்டர் பகுதி மற்றும் ராக்கெட் என இரண்டாக பிரிந்து இருக்கிறது. பூஸ்டர் பகுதி பிரிந்து பூமியை நோக்கி செங்குத்தாக விழுந்து இருக்கிறது.
இந்த நிகழ்வின் போது சுமார் 8.5 நிமிடங்களில் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டு கரீபியன் கடல் பகுதியில் வெடித்து சிதறி இருக்கிறது எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.