‘நானும் உள்ளே வரலாமா’?!! ஒரு எலியால் கதிகலங்கிப்போன நாடாளுமன்றம்!!

0
177

‘நானும் உள்ளே வரலாமா’?!! ஒரு எலியால் கதிகலங்கிப்போன நாடாளுமன்றம்!!

நாடாளுமன்றத்தில் எலி புகுந்த வீடியோ ஒன்று தற்போது மிகவும் தீயாக பரவி வருகின்றது. சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் பல வீடியோக்கள் வைரலாகி வரும் .அதில் பல வீடியோக்கள் மிகவும் டிரெண்டாகி இருக்கின்றன.

மக்கள் தற்போது அதிகமாக காமெடி வீடியோக்களை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். மனிதாபிமானம் நிறைந்த வீடியோக்களையும் அதிகமாக பார்க்கின்றனர். அந்தவகையில், தற்போது பாராளுமன்றத்தில் எலி ஒன்று வந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகின்றது.

ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் வழக்கமான அலுவல் ரீதியான ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்பொழுது திடீரென எலி ஒன்றை கண்டு பெண் எம்.பி ஒருவர் கத்த தொடங்கினார். அதனை அடுத்து பீதி அடைந்த சிலர் இருக்கையை விட்டு ஓட ஆரம்பித்தனர்.

மேலும், சிலர் எலி எங்கே என்று தேடினர். இந்த சிரிய எலியால் நாடாளுமன்ற கூட்டம் சிறிது நேரத்தில் கதிகலங்கிப் போய் விட்டது. மேலும், இந்த வீடியோ தற்போது மிகவும் வைரலாகி இருக்கிறது. இந்த வீடியோவை கண்ட மக்கள் சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நடந்தது போலவே எலிக்காக பயந்து இந்த ஓட்டம் ஓடி இருக்காங்களே? என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

மேலும் ஒரு எலிக்கே இந்த ஓட்டம் நாடாளுமன்ற கூட்டத்தில் நடந்த காமெடியை பாருங்கள் என்று கூறி வருகின்றனர். மேலும் இதனை கண்டு மக்கள் மிகவும் கேலி கிண்டல்கள் செய்து வருகின்றனர்.