Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மீனின் இந்த பகுதியில் இருந்து தயார் செய்யப்படும் புதிய உணவு இதுக்கு இவ்வளவு ருசியா! வலுக்கும் கண்டனங்களும் வரவேற்பும்!

#image_title

மீனின் இந்த பகுதியில் இருந்து தயார் செய்யப்படும் புதிய உணவு இதுக்கு இவ்வளவு ருசியா! வலுக்கும் கண்டனங்களும் வரவேற்பும்!

மீன்களின் விந்துவை வைத்து புதிய வகையான உணவை ஸ்பெயின் நாட்டினர் தயார் செய்து  விற்பனை செய்து வருகின்றனர்.

உலகில் பல்வேறு நாட்டினரை  சேர்ந்தோர் பல வகையான உணவுகளை தயார் செய்து சாப்பிட்டு வருகின்றனர். நம் இந்திய நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திற்கும், கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு நாம் உணவு வகைகளை சமைத்து சாப்பிட்டு வருகிறோம்.

நம் தமிழ்நாட்டில் சோறு, இட்லி, தோசை, காய்கறிகள் என பலவகையான உணவுகளை சாப்பிட்டு வருகிறோம். வட இந்தியாவில் சப்பாத்தி, ராகி போன்ற உணவுகளை சாப்பிட்டு வருகிறார்கள். சீனா போன்ற நாடுகளில் பாம்பு, அணில், தவளை போன்றவற்றை சமைத்து உணவாக சாப்பிட்டு வருகின்றனர். ஏன் சில வகையான பூச்சிகளை கூட அவர்கள் உணவாக சாப்பிட்டு வருவதாக கூறப்படுகிறது. அமெரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து, கனடா போன்ற  நாடுகளில் மக்கள் பல வகையான உணவு வகைகளை உண்டு வருகின்றனர். அதில் சில விசித்திரமான உணவுகளும் அடங்கும். நம் பார்த்து பயப்படும் பூச்சி வகைகளையும், விலங்குகளையும் கூட சமைத்து உண்டு வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது ஸ்பெயினில் இவற்றை எல்லாம் விஞ்சும் அளவுக்கு மீனின் விந்துவிலிருந்து ஒரு உணவு வகையை தயாரிக்கிறார்கள். ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டை சேர்ந்தவர் டேபிஸ் முனோஸ் என்ற சமையல் கலைஞர் தான் இந்த புதிய விதமான உணவை செய்துள்ளார். இவர் ஒர் உணவகத்தை நடத்தி வருகிறார்.

மீனிலிருந்து சிறு பையில் விந்து எடுக்கப்பட்டு, அவை வெள்ளை அல்லது வெளிர் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த திரவத்தை உணவில் சேர்க்கிறார்கள், அல்லது உணவு சமைத்த பிறகு அதில் கலக்கப்படும். இந்த விந்தணுக்கள் பஃபர் பிஷ், மாங்க் பிஷ், காட் உள்ளிட்டவைகளில் இருந்து எடுக்கப்படுகிறது. இதன் ருசி மக்களுக்கு மிகவும் பிடித்துப் போய் இருக்கிறது, இதன் சிறப்பம்சம்.

இந்த உணவை தயார் செய்யும் டேவிட் முனோஸ் ஜப்பான் நாட்டிலிருந்து இந்த உணவை தான் கற்றுக் கொண்டதாக கூறுகிறார். ஜப்பான் நாட்டில் சென்றிருந்தபோது மீன் விந்துக்களை வைத்து உணவை தயார் செய்திருந்தனர்.அதன் சுவையோ அபாரம். மீன் விந்துக்களை வைத்து எப்படி அந்த உணவை தயார் செய்கிறார்கள் என்பதை கற்றுக் கொண்டு என்னுடைய ஸ்பெயின் நாட்டில் இந்த உணவை தயார் செய்து, விற்று வருவதாக அவர் கூறுகிறார்.

என்னது மீன் விந்துவை வைத்து உணவாக? என்று கேட்டதும்  பலருக்கும் குமட்டுகிறது. சிலர் இந்த உணவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். இருப்பினும், இந்த உணவை தயார் செய்த முனோஸ், கடந்த 2022 ஆம் ஆண்டு மேட்ரிட்டில் நடந்த விழாவில் உலகிலேயே சிறந்த சமையல் கலைஞர் என்பதற்கான விருது பெற்றார் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

 

 

 

Exit mobile version