ரேஷன் கடை ஊழியர்களுக்கு கிடைக்க போகும் சிறப்பு தொகை! அமைச்சர் வெளியிட்ட குட் நியூஸ்!
பட்ஜெட் தாக்கல் முடிந்த நிலையில்,நேற்று முதல் ஒவ்வொரு துறை ரீதியான மானியக்கோரிக்கை குறித்து விவாதம் நடந்து வருகிறது.அந்தவகையில் இன்று கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் துறை ரீதியான விவாதம் நடந்து வருகிறது.அந்த விவாதத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இனி சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.12 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக கடன் தொகை உயர்த்தப்படும் என கூறினார்.அதனையடுத்து உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி முக்கிய அறிவிப்புக்களை வெளியிட்டார்.நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு பயன் தரும் வகையில் இந்த அறிவிப்பு இருந்தது.
நமது தமிழகத்தில் பொது விநியோகம் சிறப்பாக நடப்பதற்கு முக்கிய நியாய விலைக்கடை ஊழியர்களின் பங்கு முக்கிய பங்கை வகிக்கிறது.அவர்களை ஊக்குவிக்கும் வகைகயில் சிறப்பு தொகை வழங்க வேண்டும் என கூறினார்.அதவாது பிற துறைகளில் எவ்வாறு சிறப்பாக பணியாற்றியவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சான்றிதழ்,விருது போன்றவற்றை கொடுக்கிறார்களோ,அதுபோல இவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று கூறினார்.அதனால் இனி வரும் காலங்களில் நியாய விலைக்கடைகளில் சிறப்பாக பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கௌரவிக்கும் வகையில் சிறப்பு தொகை மற்றும் விருது வழங்கப்படும் என்று கூறினார்.
இதனால் ஊழியர்கள் சிறப்பாக செயல்பதுவர் என்றும் தெரிவித்தார்.இந்த விருது வழங்குதல் மாவட்டம் மற்றும் மாநிலம் வாரியாக சிறப்பாக பணியாற்றையவரை தேர்ந்தெடுத்து வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.மேலும் உணவுத்துறை ரீதியாக பல சிறப்பு அம்சங்கள் வகுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இந்த விருது வழங்குதல் குறித்து செய்தியை அறிந்த ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.விற்ப்பனையாளர்கள் மற்றும் எடையாளர்கள் என அனைவருக்கும் மாநிலம் மற்றும் மாவட்ட ரீதியாக பரிசு வழங்கப்படும் என தெரிவித்தார்.