Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீட் விலக்கு மசோதா! உப்புக்கு சப்பாணியான ஆளுநரின் காரணம் சபாநாயகர் விளாசல்!

நீட் விலக்கு மசோதாவை மறுபடியும் நிறைவேற்றும் விதத்தில் சட்டப் பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று காலை தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.

தமிழக சட்டசபையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி நீட் தேர்விலிருந்து விலக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்து மசோதா நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவை சுமார் 142 நாட்களுக்குப் பின்னர் ஆளுனர் ரவி மாநில அரசுக்கே திருப்பியனுப்பியிருக்கிறார்.

இந்த நீட் விலக்கு மசோதாவை உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாறாகவுள்ளதாக ஆளுநர் மாளிகை சார்பாக தமிழக அரசுக்கு விளக்கம் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், மசோதாவை திருப்பியனுப்பியதை அடுத்து கடந்த 5 ஆம் தேதி சட்டசபை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது அனைத்துக் கட்சி கூட்டத்தின் போது ஆலோசனைக்குப் பிறகு எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் சட்டமன்ற சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதாவை மறுபடியும் நிறைவேற்றும் விதத்தில் தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று காலை 10 மணி அளவில் தொடங்கி நடந்து வருகிறது. தமிழக சட்டசபையில் 11 வருடங்களில் 5வது முறையாக இன்று சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது.

இந்த சூழ்நிலையில், சபாநாயகர் உரையாற்றும்போது நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விளக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி ஒருமனதாக சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது. அந்த சட்ட முன்வடிவு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்காக தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் கடந்த 142 நாட்களாக அந்த தீர்மானத்தின் மீது எந்த ஒரு முடிவையும் எடுக்காத ஆளுநர் தற்சமயம் அந்த சட்ட முன்வடிவை மாநில அரசுக்கு அவருடைய தனி செயலாளர் மூலமாக திருப்பியனுப்பியிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

அதோடு சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டி நீட் தேர்வு விலக்கு சட்ட முன்வடிவை நிறைவேற்ற வேண்டும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆலோசனைக்குப் பிறகு முடிவெடுக்கப்பட்டது.

அதனடிப்படையில் சட்டசபையில் சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று கூட்டப்பட்டு நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய சபாநாயகர் நீட் விலக்கு மசோதா நிராகரிப்புக்கு ஆளுநர் தெரிவித்த காரணங்கள் ஏற்புடையதாகயில்லை என கூறினார்.

Exit mobile version