கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்!! பக்தர்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!!
திருவண்ணாமலையில் கிரிவலத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் இன்று தெரிவித்துள்ளது.
இது பற்றி அரசு விரைவு போக்குவரத்து கழகம் தனது செய்தி குறிப்பில் கூறியதாவது,
வருகின்ற ஆகஸ்ட் 2-ஆம் தேதி பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் நடைபெறும். அதுவும் இந்த மாதம் ஆடி மாதம் என்பதால் ஏராளமான பக்தர்கள் கிரிவலத்தில் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு ஆகஸ்ட்- 1 மற்றும் ஆகஸ்ட்- 2 ஆகிய தேதிகளில் பக்தர்கள் சென்னையில் இருந்து திருவண்ணாமலை சென்றுவர மற்றும் திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு திரும்ப வர அதிநவீன சிறப்பு பேருந்துகள் அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் அன்றைய தினங்களில் இயக்கப்பட உள்ளன.
எனவே ஆகஸ்ட் 1ம் தேதி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பிற்பகல் 3 மணி, 4 மணி, 5 மணிக்கு திருவண்ணாமலை செல்வதற்கும், மறு மார்க்கமாக திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து அதிகாலை 3 மணி, 4 மணி, 5 மணிக்கு சென்னை திரும்பி வரவும் இந்த பேருந்துகள் புறப்பட தயாராக உள்ளது.
மேலும் பேருந்து இயக்கம் மற்றும் நேரம் குறித்த விவரமான தகவலுக்கு சென்னை கோயம்பேடு பேருந்து நிலைய கைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
- கைபேசி: 9445014452
- தலைமையக கைப்பேசி: 9445014463, 9445014424 மற்றும் 9445014416 போன்ற எண்களில் தொடர்பு கொண்டு பக்தர்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.