Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சுற்றுலா பயணிகளுக்கென சிறப்பு பேருந்துகள்!! தமிழக அரசின் அறிவிப்பு!!

#image_title

சுற்றுலா பயணிகளுக்கென சிறப்பு பேருந்துகள்!! தமிழக அரசின் அறிவிப்பு!!

 

ஏற்காட்டில் சுற்றுலா தளங்களுக்கு வரும் பயணிகள் போதுமான பேருந்து வசதி இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்காக போக்குவரத்து கழகம் முடிவெடுத்துள்ளது.

இதைப்பற்றி தமிழக அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி செய்தியில் கூறியதாவது, ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை கண்டு கழிப்பதற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டு வருகின்றனர்.

இவ்விழா சென்ற மாதம் 21- ஆம் தேதி முதல் 28- ஆம் தேதி வரை நடந்து வந்தது. இதற்காக தினமும் இயக்கப்படும் 12 பேருந்துகளுடன் 40 சிறப்பு பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்பட்டன.

இதே போல் சேர்வராயன் கோவில் விழாவிற்காக 25 சிறப்பு பேருந்துகள் தனியாக இயக்கப்பட்டன. இங்கு சுற்றுலாவிற்கு வந்த பள்ளி மாணவிகள் மூன்று பேருந்துகளில் ஒரே நேரத்தில் ஏறினர்.

இதனால் சுற்றுலா பயணிகளுக்கு பேருந்து கிடைப்பதில் சற்று சிக்கல்கள் ஏற்படுகிறது. இது குறித்து புகார்களும் பல எழுந்துள்ளனர். மலை வழித்தடத்தில் பேருந்துகளை கவனமாக ஓட்ட வேண்டும் என்பதால் அனுபவம் மிக்க ஓட்டுனர்களே பேருந்தை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமும் சுற்றுலா பயணிகளுக்காக சேலம் மற்றும் ஏற்காடு பேருந்து நிலையத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், மேலும் கூடுதலாக 4 பேருந்துகள் பள்ளி விடுமுறை முடியும் வரையில் இயக்கப்பட முடிவு செய்துள்ளதாகவும் கூறி உள்ளார்.

வாரக் கடைசி நாட்களான சனிக்கிழமைகளிலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டத்தை தவிர்க்கும் விதமாக மேலும் சில சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பயணிகளின் அவதி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version