Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஸ்மார்ட் கார்டில் முகவரி மாற்றும் சிறப்பு முகாம்! உடனே பயன்படுத்தி கொள்ளுங்கள்! 

Special camp for changing address on smart card! Use it now!

Special camp for changing address on smart card! Use it now!

ஸ்மார்ட் கார்டில் முகவரி மாற்றும் சிறப்பு முகாம்! உடனே பயன்படுத்தி கொள்ளுங்கள்!

ஒரு சிலர் தனது ஸ்மார்ட் கார்டில் முகவரி மாற்றி கொடுத்திருப்பார்கள் அல்லது சரியாக பூர்த்தி செய்திருக்க மாட்டார்கள். என் முகவரி என்பது மிகவும் முக்கியமானது. திருவள்ளூர் மாவட்டத்தில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பாக சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

ஒவ்வொரு வட்டத்திலும் ஒன்பது கிராமங்களில் வரும் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா். நடைபெறும் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம் மற்றும் புகைப்படம் பதிவு செய்வது தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம். மேலும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் இணையதளத்தில் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூா்- செய்யம்பாக்கம் நியாயவிலைக் கடை அருகில், ஊத்துக்கோட்டை-பாலவாக்கம் ஜே. ஜே. நகா் (இருளா் பகுதி) நியாயவிலைக் கடை அருகில், பூந்தமல்லி-குத்தம்பாக்கம் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், திருத்தணி-தாடூா் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், பள்ளிப்பட்டு-அத்திமாஞ்சேரி நியாயவிலைக் கடை அருகில், பொன்னேரி- பண்டிக்காவனுா் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், கும்மிடிப்பூண்டி-மாநெல்லுா் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், ஆவடி-கொசவம்பாளையம், திருநின்றவூா் டி கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், ஆா். கே. பேட்டை-மகான்காலிகாபுரம் நியாயவிலைக் கடை அருகில் நடைபெற இருக்கிறது. எனவே இந்தச் சிறப்பு முகாமில் அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம்.

Exit mobile version