Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம்! மாற்றுத்திறனாளிக்கள் மகிழ்ச்சி!

தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம்! மாற்றுத்திறனாளிக்கள் மகிழ்ச்சி!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர்  பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு முகாம் ஒன்று நடைபெற்றது. அந்த  முகாமை ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிலட்சுமி திராவிட செல்வன் தலைமையில் பொறுப்பு  ஏற்று நடத்தினார். அந்த முகாமில்  பல்வேறு துறையில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுது. அந்த பகுதியில் உள்ள அனைத்து  மாற்றுத்திறனாளிகளுக்கும் எலும்பு முறிவு, கண் பிரிவு, மனநலப்பிரிவு மற்றும்  காது பிரிவு போன்ற பிரிவில் உள்ள மருத்துவர்களின் மூலம்  மருத்துவம் பார்க்கப்பட்டது.

மேலும்  அந்த முகாமில் அடையாள அட்டை 20 பேருக்கும் ,யூ டி ஐ டி விண்ணப்பம் 31 பேருக்கும் மற்றும்  உதவித்தொகை 11 பேருக்கும்  வழங்கப்பட்டது.  இந்த முகாம் ஏற்பாடானது அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உள்ள ஆசிரியை ,ஆசிரியர்கள்  மூலம் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு  இந்த முகாம் நடத்தப்பட்டது .இந்த முகாமில் அந்த பகுதியில் உள்ள 61  மாற்றுத்திறனாளிக்கள் பயன் பெற்றனர். அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version