தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்பொழுது இதில் ஒரு முக்கிய சிறப்பு தேர்வை கொண்டு வந்திருக்கிறது.
காலி பணியிடங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை :-
தட்டச்சர் (Typist)
இதில் தற்பொழுது 50 காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதோடு தட்டச்சுத் தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் அலுவலக தானியங்கமாக்கல்(Computer Automation)சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.2024 அன்று படி, 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பி.சி/எம்.பி.சி பிரிவினர் 34 வயதிற்குள்ளும், எஸ்.சி/எஸ்.சி.ஏ/எஸ்.டி பிரிவினர் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :-
✓ தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
✓ நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
✓ இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவீட்டின் படி வைத்திருக்க வேண்டும்.
✓ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது கல்வி சான்றிதழ்களை கையில் வைத்திருக்கவும்.
✓ அனைத்து விவரங்களையும், சரியாக உள்ளீடு செய்த பின்னர் தேர்வு கட்டணத்தை செலுத்தி சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வு கட்டண விவரம் :-
ரூ. 150. ஏற்கனவே நிரந்தர பதிவு எண் வைத்திருப்பவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை.
ரூ. 100. எஸ்.சி/எஸ்.சி.ஏ/எஸ்.டி/ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான கடைசி நாளாக டிசம்பர் 24ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்த மேலும் பல தகவல்களை அறிய https://www.tnpsc.gov.in/Document/tamil/SCE%20Tamil%20Final_.pdf என்ற இணையதளத்தினை சென்று பார்க்கும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.