பிரதமர் ஜனாதிபதி போன்ற விவிஐபிகளுக்காகவே உருவாக்கப்படும் சிறப்பு விமானம்

0
102

இந்தியா விரைவில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு விமானத்தை வாங்க முடிவு செய்துள்ளது.அதில் பிரதமர் ஜனாதிபதி மற்றும் துணை தலைவர்கள் உள்ளிட்ட விஐபிக்கள் மட்டுமே விமானங்களுக்கு பயன்படுத்தும் என்று கூறியுள்ளனர்.

இந்தியா விரைவில் ஏர் இந்தியா ஓன் (air India one) போயிங் 777-300ER விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளது.

இந்த விமானத்தின் பாதுகாப்பு மிக முக்கியத்துவம் பெற்றதாகவும் அதிநவீன வசதியையும் கொண்டிருந்த விமானங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.பெரிய விமான அகசிவப்பு எதிர் நடவடிக்கைகள் (LAIRCM) மற்றும் சுய பாதுகாப்பு சூட் (SPS) உள்ளிட்டவை முழுமையாக புதுப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ளனர்.

இந்த விமானத்தில் எலக்ட்ரானிக் போர் வழக்கு இருக்கும் என்பதால் தரை- வான் தாக்குதலில் இருந்து பாதுகாக்கவும், பதிலடி கொடுக்கும் திறன் உள்ளதாக கூறியுள்ளனர்.இந்திய விமானப்படை விமானிகளுடன் இந்த அதிநவீன விவிஐபி விமானத்தை பறக்க 40 ஏர் இந்தியா விமானிகள் அடங்கிய குழு ,தற்பொழுது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறன.

இதற்கு முன் இருந்த விவிஐபி 747கள் போயிங் ஜெட் விமானங்கள் பறந்து வந்த நிலையில் ,இந்திய கடற்படைக்கு சொந்தமான விமானங்களுக்கும் பயன்படுப்பட்டு வருகின்றனர்.இந்த விமானமானது நீண்ட பயணத்தில் பொருத்தமில்லாத விமானமாக கருதப்படுகிறது. இந்த விமானத்தின் மூலம் எரிபொருள் நிரப்பி,10 மணி நேரத்திற்கு மேலாக பறக்க முடியும். ஆனால் புதிய விமானங்களில் தொடர்ந்து 17 மணி நேரத்திற்கும் மேலாக பறக்க இயலும் என கூறியுள்ளனர்.

ஏர் இந்தியா விமானத்தின் மூலம் பிரதமர் அல்லது ஜனாதிபதி எந்த ஒரு பொறி இல்லாமல் வீடியோ அல்லது ஆடியோ கான்பிரன்ஸ் மூலம் சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் தொடர்பு கொள்ள இயலும் என்றும் கூறியுள்ளனர்.இந்த விமானத்தின் ஆய்வகம், சாப்பாடு அறை, பெரிய அலுவலகம் மற்றும் மாநாட்டு அறை இதில் அடங்கியுள்ளன.மேலும் இதற்கான பாதுகாப்பு அவசர நிலை மருத்துவ தொகுப்பும் உடனடியாக கிடைக்கும் வகையில் இந்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.