Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழகம் முழுவதும் 702 பறக்கும் படைகள் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

தமிழகம் முழுவதும் 702 பறக்கும் படைகள் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள் வீதம் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 702 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் உள்ளதாவது:

தமிழகம் முழுவதும், ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள், 3 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 234 தொகுதிகளுக்கும் 702 பறக்கும் படைகளும், 702 கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், மேலும், ஒவ்வொரு தொகுதிகளுக்கும் ஒரு வீடியோ குழுவும் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பாதுகாப்பிற்காக 330 கம்பெனி துணை ராணுவம் அனுப்பி வைக்கப்படவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தற்போது வரை 45 கம்பெனி துணை ராணுவப்படை வந்துள்ள நிலையில், அடுத்த 2 நாட்களில் மேலும் 15 கம்பெனி வர உள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி போஸ்டர், பேனர் வைத்ததாக 46 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version