Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அப்பாடா இதற்கெல்லாமா சிறப்பு சட்ட மன்றங்கள் கூட்டப் பட்டன? ருசிகர தகவல்!

நீட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வழங்கவேண்டும் என்று தெரிவித்து கடந்த செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது. இதனை குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்காக தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்கள்.

ஆனாலும் 142 நாட்களுக்குப் பின்னர் கடந்த 1ம் தேதி ஆளுநரின் தனிச் செயலாளர் மூலமாக நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்டதாக சபாநாயகர் கூறினார்.

ஆனால் இந்த நீட் தேர்வு என்பது இந்தியாவில் முதன் முதலாக காங்கிரஸ் ஆட்சியின் போதுதான் கொண்டுவரப்பட்டது என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. ஆனால் தற்போது அரசியல் காரணங்களுக்காக நீட் தேர்வை கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியே அந்த தேர்வை எதிர்ப்பது வேடிக்கையாகயிருக்கிறது.

இந்த நிலையில், நீட் தேர்விற்கான சட்ட முன்வடிவை தமிழக ஆளுநர் திருப்பியனுப்பியதை முன்னிட்டு சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்டி நீட் விலக்கு சட்ட முன்வடிவு தொடர்பாக மறுபடியும் விவாதம் செய்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதனடிப்படையில் சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

நாம் சற்று பின்னே சென்று கடந்த 10 வருட காலங்களில் கூட்டப்பட்ட சிறப்பு சட்டசபை கூட்டங்கள் பற்றி தெரிந்து கொள்வோமா?

சென்ற 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக தோல்வியை தழுவிய திமுக மிகப்பெரிய பலத்துடன் ஆட்சியில் அமர்ந்தது. அப்போது முல்லைப் பெரியாறு அணை குறித்த கூட்டம் நடத்தப்பட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் பின்பு 2013ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த காமன்வெல்த் போட்டிகளை புறக்கணிப்பது தொடர்பாக சிறப்பு சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டு முடிவெடுக்கப்பட்டது என தெரிகிறது.

அதேபோல 2017 ஆம் வருடம் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு அவசரக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் 2017ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு அந்த சட்ட முன்வடிவு மத்திய அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு பிறகு அந்த சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அதேபோல 2018 ஆம் வருடத்தில் கர்நாடக மாநில அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்சித்தபோது அந்த அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது.

இதில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஒப்புதல் வழங்க கூடாது என்று மத்திய அரசுக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.கடைசியாக 2022-ல் நீட் தேர்விலிருந்து விலக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்து அவசர சட்டப்பேரவை கூட்டம் இன்றைய தினம் நடைபெற்று வருகிறது.

Exit mobile version