தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்காக சிறப்பு செய்தி! ஒதுக்கீடு வழங்கிய ஹைகோர்ட்!

0
141
Special news for Tamil educated students! Allocated by the High Court!

தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்காக சிறப்பு செய்தி! ஒதுக்கீடு வழங்கிய ஹைகோர்ட்!

குரூப் 1 தேர்வு முடிவுகளை மாற்றி அமைக்கும் உத்தரவை பின்பற்றினால், அதிகாரிகள் நியமனம் செய்ய காலதாமதம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஜனவரி 2020 ம் ஆண்டில் குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மீண்டும் ஐகோர்ட் உத்தரவின்படி தேர்வு முடிவுகளை மாற்றி அமைத்து உத்தரவை பின்பற்றி அதிகாரிகள் நியமனம் செய்ய காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் கூறுகையில் பிப்ரவரி 9ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட குரூப்-1 முதல்நிலைத் தேர்வில் இருந்து விலக்கு தர முடியாது என்றும், ஆங்கில வழி பள்ளி படிப்பை முடித்துவிட்டு பட்டப்படிப்பு மட்டும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவிகிதம் ஒதுக்கீடு செய்யலாமா எனவும் கேள்வி எழுப்பினார்கள்.

தொடர்ந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில பல்கலைக்கழகங்களில் தமிழ் வழியில் படித்த அதற்கான சான்றிதழை முறைகேடாக பெற்று வேலைக்கு வருகின்றனர். இது குறித்து தமிழ்நாடு அரசு விசாரிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்த நீதிபதிகள் இவ்வாறு கூறினார்கள். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.

மேலும் 2020 ம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முடிவிலிருந்து 1 ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த டிஎன்பிஎஸ்சி ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.