Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாட்களின் சிறப்பு! இந்த தெய்வங்களை இந்த தினத்தில் வழிபட்டால் கூடுதல் நன்மை!

நாட்களின் சிறப்பு! இந்த தெய்வங்களை இந்த தினத்தில் வழிபட்டால் கூடுதல் நன்மை!

திங்கள் கிழமையில் வழிபட வேண்டிய தெய்வங்கள்:திங்கட்கிழமை என்பது சிவனுக்கு உகந்த தினங்களுள் ஒன்றாகும். திங்கள் கிழமையில் நீலகண்டனை விரதமிருந்து வழிபட உகந்த நாளாக கருதப்படுகிறது. மேலும் திங்களன்று சிவபெருமானுக்கு பால், அரிசி மற்றும் சர்க்கரை படைத்து வழிபடலாம்.

செவ்வாய் கிழமையில் வழிபட வேண்டிய தெய்வங்கள்:ஹனுமரை செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து வழிபடலாம். மேலும், துர்க்கை அம்மனுக்கும் மிகவும் உகந்த தினமாகும். மேலும் செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு போட்டு வழிப்பட்டு வந்தால் வாழ்க்கை வளம் பெரும் என நம்பப்படுகிறது.

 

புதன் கிழமையில் வழிபட வேண்டிய தெய்வங்கள்:புதன் கிழமையில் விநாயகரை விரதமிருந்து வழிபட உகந்த தினமாக கருதப்படுகிறது. மேலும் எந்த ஒரு காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும் முதலில் விநாயகரை வணங்கிய பிறகு தான் தொடங்கவேண்டும்.

வியாழன் கிழமையில் வழிபட வேண்டிய தெய்வங்கள்:வியாழக்கிழமை அன்று விஷ்ணு பகவானை விரதமிருந்து வழிபட வேன்டும் மேலும் விஷ்ணு பகவானின் மனைவியான லக்ஷ்மி தேவியை வணங்கவும் வியாழன் கிழமை உகந்த நாள். மேலும் வியாழக்கிழமைகளில் தட்சணாமூர்த்தி மற்றும் குரு வழிபட உகந்த நாளாகும்.

வெள்ளி கிழமையில் வழிபட வேண்டிய தெய்வங்கள்:வெள்ளிக்கிழமையில் துர்க்கை அம்மனையும் அவரது அவதாரங்களையும் விரதமிருந்து வழிபட வேண்டும். இந்த நாளில் அம்மனின் அனைத்து அவதாரங்களையும் ஒன்றாகவும் வழிபடலாம்.

சனி கிழமையில் வழிபட வேண்டிய தெய்வங்கள்:சனிக்கிழமை சனி கிரகத்தை சார்ந்ததாகும் அதனால் சனிக்கிழமைகளில் விரதமிருந்து சனி பகவான், பெருமாள், ஆஞ்சநேயர் மற்றும் காளி தேவியை வழிபட வேண்டும்.

ஞாயிறு கிழமையில் வழிபட வேண்டிய தெய்வங்கள்:நவகிரகத்தின் முதன்மையான கடவுளான சூரிய பகவானை ஞாயிறு அன்று விரதமிருந்து வழிபடுவது உகந்தது. சூரிய தோஷம் இருப்பவர்கள் ஞாயிறு கிழமையில் விரதமிருந்து வழிபட்டால் இன்னல்கள் தீரும் என நம்பப்படுகிறது.

 

Exit mobile version