Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆதிதிராவிடராக இருந்து கிறிஸ்துவராக மாறியவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு! முதல்வர் ஸ்டாலின் சிறப்பு தீர்மானம்! 

#image_title

ஆதிதிராவிடராக இருந்து கிறிஸ்துவராக மாறியவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு! முதல்வர் ஸ்டாலின் சிறப்பு தீர்மானம்! 
நாட்டிலுள்ள பொது மக்கள் தங்கள் விருப்பப்படி விரும்பிய மதத்திற்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட இனத்திற்கோ மாற எவ்வித தடைகளோ சட்டமோ கிடையாது என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப நமது அரசியல் அமைப்பு சட்டம் வழி வகுத்துள்ளது. இதன் படி ஒட்டுமொத்த பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு, உரிமைகள், இட ஒதுக்கீடு போன்ற சலுகைகளை ஆதி திராவிடர் பிரிவிலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர்களுக்கும் சலுகைகளை தர வேண்டும் எனவும் அதற்கான சட்ட திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என கூறி தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.
இந்த சிறப்பு தீர்மானம் குறித்து சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, இந்து மதத்தில் இருந்து வேறு மதம் மாறியவர்கள் பட்டியலின சாதிகளில் இணைய முடியாது. ஆனால், சீக்கியம் மற்றும் பவுத்த மதம் மாறியவர்களை பட்டியலின சாதிப்பட்டியலில் சேர்த்து முறையே 1956, 1990 ஆண்டுகளில் சட்ட திருத்தம் செய்யப்பட்டது. இதே போன்ற திருத்தம்தான் கிறிஸ்தவர்களாக மாறிய ஆதிதிராவிடர்களும் எதிர்பார்க்கின்றனர்.
வரலாற்று ரீதியாகவே ஆதி திராவிடர் வகுப்பினராக இருக்கும்போது அவர்களுக்கு பட்டியலின வகுப்புக்கான உரிமையை வழங்குவதே சரியானது. மனிதர்கள் தாங்கள் விரும்பும் மதத்தைப் பின்பற்ற உரிமை உண்டு. ஆனால் ஜாதி என்பது மாறுதலுக்கு உட்பட்டது அல்ல. ஜாதி ஏற்றத்தாழ்வை வைத்து எந்த வகையில் அடக்கி ஒடுக்கினார்களோ, அதே ஜாதியை வைத்தே இடஒதுக்கீடு வழங்கி உயர்வடைய வைக்கும் தத்துவம்தான் சமூகநீதித் தத்துவம்.
ஆதிதிராவிடர்களாக இருந்து மதம் மாறிய பின்னரும் தீண்டாமை கொடுமை தொடர்கிறது. சமூகநீதி தத்துவத்தை அனைத்து வகையிலும் பின்பற்ற வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம். கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும், சமூகநீதி உரிமைகள் தரப்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் உரையாற்றினார்.
Exit mobile version