பெண்களுக்கான ஸ்பெஷல் ஸ்கீம்!! 7.5% வட்டி.. முதிர்வு ரூ.2,32,000!! உடனே அப்ளை செய்யுங்கள்!!
பெண்களின் சேமிப்பை உயர்த்த மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு நடத்தி வருகிறது.போஸ்ட் ஆபிஸ் திட்டங்களில் நல்ல வட்டி அளிக்கும் திட்டமாக இது உள்ளது.
இந்த திட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.FD,PPF போல் அல்லாமல் 2 வருடங்களில் முதலீட்டு தொகை + வட்டியை பெற்றுக் கொள்ள முடியும்.இந்த திட்டத்திற்கு தற்பொழுது 7.5% வட்டி வழங்கப்படுகிறது.
இந்திய குடியுரிமை பெற்ற பெண்கள் அனைவரும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.18 வயதிற்கு கீழ் உள்ள பெண் குழைந்தைகள் தங்கள் பெற்றோர் அல்லது காப்பாளர் மூலம் இந்த திட்டத்தை தொடங்கலாம்.
இந்த திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.இந்த திட்டத்தை தபால் நிலையம் அல்லது வங்கி கிளைகளில் தொடங்கலாம்.இத்திட்டத்தின் குறைந்தபட்ச முதலீட்டு தொகை ரூ.1000 ஆகும்.
மேலும் அதிகபட்ச முதலீட்டு தொகை ரூ.2,00,000 என்று மத்திய அரசு முதலீட்டிற்கான உச்ச வரம்பை நிர்ணயித்திருக்கிறது.இந்த திட்டத்தில் முதலீடு செய்த பின்னர் ஒவ்வொரு காலாண்டிற்கு ஒருமுறை வட்டி,தங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.
நீங்கள் முதலீடு செய்த 6 மாதங்களுக்கு பிறகு கணக்கை முடித்துக் கொள்ள நினைத்தால் 2% வட்டி தொகை கழிக்கப்பட்டு 5.5% வட்டி + முதலீட்டு தொகை வழங்கப்படும்.இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் வரி சலுகை கிடைக்காது.அனைத்து வயது பெண்களும் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.இந்த திட்டத்தில் முதிலீடு செய்ய எத்தனை கணக்கு வேண்டுமானலும் திறக்கலாம்.ஆனால் ஒரு கணக்கு தொடங்கி மூன்று மாதங்கள் நிறைவடைந்திருக்க வேண்டும்.