பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாமலிருக்க மாநகராட்சி செய்த சிறப்பு காரியம்!
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் பேருந்து போக்குவரத்து சாலைகள் மற்றும் உட்புற சாலைகளில் தூய்மை பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் மட்டும் 387 கிலோ மீட்டர் நீளமுள்ள 471 பேருந்து போக்குவரத்து சாலைகளும், 5 ஆயிரத்து 270 கிலோ மீட்டர் நீளமுள்ள 34 ஆயிரத்து 640 உட்புற சாலைகளும் உள்ளன. இந்த சாலைகளில் தூய்மை பணிகள் நாள்தோறும் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் அங்கு உள்ள 200 வார்டுகளில் மட்டும் தினசரி சேகரிக்கப்படும் சுமார் 5 ஆயிரம் டன் அளவிலான குப்பைகள் பல்வேறு வகையான வாகனங்கள் மூலம் குப்பைகளை கையாளும் கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அப்போது சாலைகளில் தூய்மை பணிகள் பகலில் மேற்கொள்ளப்படுவதால் குப்பைகள் அகற்றப்படும்போது, பேருந்து மற்றும் உட்புற சாலைகளில் பலவிதங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு மாநகராட்சி அனைத்து சாலைகளிலும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மை பணி மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை இரவு நேரங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது தூய்மைப் பணியை மேற்கொள்ளும் போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதை தடுக்கும் வகையில், திடக் கழிவு மேலாண்மைத் துறையின் மூலம் பேட்டரியால் இயங்கும் 255 வாகனங்கள், 53 மூன்று சக்கர வாகனங்கள், மற்றும் 23 டிப்பர் லாரிகள் ஆகியவை பயன்படுத்தப் படுகின்றன. மேலும் 1786 தூய்மை பணியாளர்களும் பணியமர்த்தப்பட்டு பணிகள் சீக்கிரமாக முடிய முடுக்கிவிடப்பட்டுள்ளன. எனவே பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளில் கூடுதல் வாகனங்கள் மற்றும் பணியாளர்களை கொண்டு அனைத்து தூய்மை பணிகளையும் இரவு நேரங்களிலேயே முடித்து வாடவும், அதன் காரணமாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போக்குவரத்து நடைபெறவும் இடயூருமின்றி தூய்மை பணிகளை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.