இந்த ஊருக்கு மட்டும் சிறப்பு இரயில்!… இரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பு!..
தென்தமிழகத்திலும் மற்றும் கேரளா மாநிலத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய விழா தான் இந்த பண்டிகை.ஓணம் பண்டிகை முன்னிட்டு சேலம் மற்றும் கேரள மாநிலம் கொச்சுவேலி- பெங்களூரு பையப்பனஹள்ளி சிறப்பு ரயில் 06037 கொச்சுவேலி ரயில் நிலையத்திலிருந்து இன்று வியாழக்கிழமை மாலை ஐந்து மணிக்கு புறப்பட்டு கொல்லம், காயங்குளம், மாவேலிக்கரை, செங்கனூர், திருவல்லா, கோட்டயம், எர்ணாகுளம், அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக நாளை வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு சேலம் வந்து சேரும்.
பின்னர் சேலத்திலிருந்து 4.33 மணிக்கு புறப்பட்டு பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக நாளை மறுநாள் காலை 10.10 மணிக்கு பெங்களூரு பையப்பனஹள்ளி ரயில் நிலையம் சென்றடையும். இதேபோல் மறுமார்க்கத்தில் பெங்களூரு – கொச்சுவேலி சிறப்பு ரெயில் 06038 பெங்களூரு பையப்பனஹள்ளி ரயில் நிலையத்தில் இருந்து நாளை பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக இரவு 7.05 மணிக்கு சேலம் வந்தடையும்.
பின்னர் இங்கிருந்து 7.08 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக நாளை மறுநாள் காலை 6.35 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்குகிறது. இந்த அதிகாரபூர்வ தகவலை சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.