இந்த இடங்களுக்கு நாளை முதல் சிறப்பு ரயில் இயக்கம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வெளி ஊர்களில் பணிப்புரிப்பவர்கள் என அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர்.அதனால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு அதிர்கரித்துள்ளது.
அதனால் பெரும்பலான மக்கள் அனைவரும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர்.ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தடுக்க அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது.அந்த வகையில் தெற்கு ரயில்வே சார்பில் சென்னை சென்ட்ரலில் இருந்து ராமேஸ்வரத்திற்கு,தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி மற்றும் திருச்சிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளன.
திருச்சியில் இருந்து நாளை மதியம் 2.15மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் இரவு ஏழு மணிக்கு தாம்பரம் வந்தடையும்.மேலும் தாம்பரத்தில் இருந்து வருகிற 27ஆம் தேதி இரவு 9.40 மணியளவில் புறப்படும் சிறப்பு ரயில் இரவு மறுநாள் அதிகாலை 2.50 மணிக்கு திருச்சியை வந்தடையும்.தாம்பரத்தில் இருந்து நாளை இரவு 10.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை ஒன்பது மணிக்கு திருநெல்வேலி வந்தடையும்.
திருநெல்வேலியில் இருந்து வருகிற 26 ஆம் தேதி மாலை 5.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் அதிகாலை நான்கு மணியளவில் தாம்பரம் சென்றடையும்.மேலும் சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற ஆம் தேதி இரவு 8.45மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 11 மணிக்கு ராமேஸ்வரம் செல்லும்,அதன் பிறகு ராமேஸ்வரத்தில் இருந்து வருகிற 24ஆம் தேதி மாலை 4.20மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.