Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வரும் 19ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை பீகாருக்கு சிறப்பு ரயில் சேவை – செய்திக்குறிப்பு வெளியீடு!!

#image_title

வரும் 19ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை பீகாருக்கு சிறப்பு ரயில் சேவை – செய்திக்குறிப்பு வெளியீடு!!

பொது மக்கள் தங்கள் தொலைதூர பயணங்களுக்கு அதிகம் பயன்படுத்துவது ரயில் பயணம் தான். அப்படி இருக்கையில், ரயில்வே நிர்வாகம் மக்களுக்காக பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. இந்நிலையில், கொச்சுவேலியில் இருந்து புறப்படும் ரயிலானது பீகார் மாநிலம் தனபூர் ரயில் நிலையம் வரை இயக்கப்படவுள்ளது என்னும் தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் செய்திக்குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அந்த செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது, ‘வரும் 19ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 2ம் தேதி வரை வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில் கொச்சுவேலியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயிலானது வியாழக்கிழமை பீகார் மாநிலம் தனபூர் ரயில் நிலையம் வரை இயக்கப்படவுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

ரயில் புறப்படும் நேரம் குறித்த விவரங்கள்

செவ்வாய்க்கிழமை காலை 4.15 மணிக்கு கொச்சுவேலியில் இருந்து புறப்படும் இந்த கொச்சுவேலி-தனபூர் சிறப்பு ரயில்(06183), வியாழக்கிழமை காலை 10 மணியளவில் பீகார் மாநிலம் தனபூருக்கு சென்றடைகிறது. தொடர்ந்து, தனபூர் ரயில் நிலையத்தில் மறுமார்கமாக 22ம் தேதி முதல் ஏப்ரல் 5 வரை வெள்ளிக்கிழமைகளில் இரவு 10.25க்கு புறப்படும் இந்த ரயில்(06184) திங்கட்கிழமைகளில் காலை 7.30 மணியளவில் மீண்டும் கொச்சுவேலி ரயில் நிலையம் வந்தடையும்.

மேலும் இந்த ரயிலானது கொல்லம், எர்ணாகுளம் டவுன், கோட்டயம், திருசூர், ஆலுவா, கோவை, பாலக்காடு, திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, ஜோலார்பேட்டை, ரேணிகுண்டா, விஜயவாடா, பீமாவரம், ராஜமுந்திரி, ராஞ்சி, கயா, பாட்னா, சாமல்கோட், கூடூர், சாம்பல்பூர், ரூர்கேலா, உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version