Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாணவர்களின் படிப்பை கருதி ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் சிறப்பு பயிற்சி வகுப்பு!

மாணவர்களின் படிப்பை கருதி ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் சிறப்பு பயிற்சி வகுப்பு!

பொதுவாகவே பள்ளி மாணவர்களில் பெரும்பாலோனோருக்கு பள்ளி பாடத்திட்டத்தில் கணிதப் பாடம் என்று சொன்னாலே அந்த நிமிடமே  அவர்களுக்கு தூக்கம் வர தொடங்கி விடும். மேலும் பள்ளி மாணவர்கள் பெரும்பாலானோர் பள்ளி பாடத்திட்டத்தில் இருக்கின்ற பாடங்களில் மற்ற பாடங்களின் மீது கற்கின்ற ஆர்வத்தை காட்டும் அளவிற்கு இந்த கணித பாடத்திற்கு அவ்வளவாக ஆர்வம் காட்டுவது கிடையாது.

இதற்கு கணிதப் பாடத்தை சரியான முறையில் ஆசிரியர்கள் நடத்தாததும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆற்றலை மேம்படுத்தும்  வகையில் ’மகிழ் கணிதம்’ என்ற பெயரில் புதிய முயற்சியை செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குநர் சுதன் மேற்கொண்டு வருகிறார்.

இவர் பிறப்பித்த உத்தரவின் படி, வரும் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் கணித ஆசிரியர்களுக்கு ’மகிழ் கணிதம்’ என்ற பெயரில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிட்டு  உள்ளதாகவும், இதன்மூலம் கணிதப் பாடத்தை பயமின்றியும், மிகவும் எளிதாகவும் மற்றும் மகிழ்ச்சியாகவும் மாணவர்கள் படிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வழிகாட்டுதல்களை ஆசிரியர்களுக்கு துறை சார்ந்த வல்லுநர்கள் கற்று தர உள்ளதாகவும், இதன் காரணமாக ஆன்லைன் பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகுப்பில் அரசு பள்ளிகளை சேர்ந்த கணித ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் சரியான முறயில் கணித பாடத்தை நடத்தாதே பள்ளி மாணவர்களுக்கு கணிதம் என்றாலே வெறுப்பு வர காரணமாக இருக்கிறது. ஆகவே பள்ளி மாணவர்கள் கணித பாடத்தை விரும்பி படிக்க வேண்டும் என்பதற்காக கணித ஆசிரியர்களுக்கு இந்த சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாடம் நடத்தும் சூழல் மகிழ்ச்சியாக மாறும் எனவும் இதன் மூலம் பள்ளி மாணவர்கள் சிறந்த முறையில் கணித பாடத்தை கற்க முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version