இன்று முதல் இந்தப் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! பயணிகளுக்கு வெளிவந்த சூப்பர் தகவல்!
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பொங்கல் பண்டிகை கொண்டாடும் விதமாக ஜனவரி 14-ம் தேதியிலிருந்து ஜனவரி 17ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொங்கல் விடுமுறையை அவரவர்களின் சொந்த ஊர்களில் கொண்டாடும் விதமாக வெளியூர்களில் இருப்பவர்களின் வசதிக்கேற்ப அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்து மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது.
கடந்த இரண்டு நாட்களாக ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்பட்டதிலிருந்து லட்சக்கணக்கோர் பயணம் செய்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆம்னி பேருந்தின் கட்டணம் மூன்று மடங்காக அதிகரித்ததால் பெரும்பாலான ரயில் பயணத்தையே விரும்புகின்றனர்.
அதனால் ரயில் சேவை விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கேரள மாநிலம் கொல்லத்திலிருந்து சென்னைக்கு இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றது.
கொல்லத்தில் இருந்து அதிகாலை 1.45 க்கு புறப்படும் ரயில் இன்று மாலை 5.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு மார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து ஜனவரி 17ஆம் தேதி மாலை 3:30 மணிக்கு புறப்படும் ரயிலானது மறுநாள் காலை 5.30 மணிக்கு கேரளம் கொல்லம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயிலானது போத்தனூர் திருப்பூர் ஈரோடு சேலம் ஜோலார்பேட்டை காட்பாடி பெரம்பூர் வழியாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.