Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

வரவிருக்கும் பண்டிகை நாட்களை கருத்தில்கொண்டு மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பி இந்த  பண்டிகை காலத்தை குடும்பத்துடன் கொண்டாட மற்றும் போக்குவரத்தை சுலபமாகவும் மற்றும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்போவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மதுரை  வரை செல்லக்கூடிய சூப்பர் பாஸ்ட் ரயில் இந்த மாதம் 19ஆம் தேதி முதல் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை வரை செல்லக்கூடிய ஒரு சிறப்பு ரயில் இம்மாதம் 19ம் தேதி முதல் இயக்கப்படும்.

இந்த ரயில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற தினங்களில் மட்டும் இயங்கும். சென்னை சென்ட்ரலில் இருந்து ஹசரத் நிசாமுதீன் ரயில் வாரம் இரு முறையும், துரந்தோ என்ற சிறப்பு ரயில் சென்னை  சென்ட்ரலில் இருந்து மதுரை வரை திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும். 

திருவனந்தபுரத்தில் இருந்து ஷாலிமார் வரை செல்லக்கூடிய சிறப்பு ரயில் வாரத்திற்கு இரண்டு முறை என வருகின்ற 22 ஆம் தேதி முதல் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில்  இயக்கப்படும். வரும் 24ஆம் தேதி முதல் கன்னியாகுமரி – ஹவுரா, சென்னையில் உள்ள எழும்பூர் வழியாக செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் சனிக்கிழமைகளில் இயக்கப்படும்.

Exit mobile version