Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Breaking: ஸ்பென்சர் பிளாசாவில் திடீர் தீ விபத்து! நெருப்பை  கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு துறையினர் தொடர் போராட்டம்!!

Spencer Plaza's sudden fire! Unable to control the fire, the fire department continues to fight!

சென்னையில் அண்ணா சாலை மீது ஸ்பென்சர் பிளாசா உள்ளது. இது 1863 ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்றாலும் 1985 ஆம் ஆண்டு கட்டடம் மறு கட்டமைக்கப்பட்டது. சென்னை நகரத்தில் முக்கிய அடையாளங்களில் ஒன்று இந்த ஸ்பென்சர் பிளாசா. இதில் பல அங்காடிகள்  உள்ளது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஸ்பென்சர் பிளாசா சென்று வருவது வழக்கம்.

குறிப்பாக பண்டிகை காலங்களில் இவ்விடங்களில் மக்களின் கூட்டம் அலைமோதும். இன்று எதிர்பாராத விதமாக ஸ்பென்சர் பிளாசா வளாகத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது மளமளவென பரவ ஆரம்பித்தது. இந்த தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இருபதுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர். அங்குள்ள மக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மேலும் இந்த தீயானது மின்சார கசிவினால் ஏற்பட்டிருக்கும் என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்..

Exit mobile version