Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆன்மீகத் தகவல்கள்.. நீங்கள் நினைத்தவை நடக்க எளிய பரிகாரம்!!

#image_title

ஆன்மீகத் தகவல்கள்.. நீங்கள் நினைத்தவை நடக்க எளிய பரிகாரம்!!

*கொடுத்தக் கடன் வசூலாக பைரவர் சந்நிதியில் தொடர்ந்து எட்டு செவ்வாய்க்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.

*ஜாதகப்படி சனி பகவானின் பாதிப்பு குறைய திங்கட் கிழமைகளில் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும். சனிக் கிழமைகளில் சனி பகவான் சந்நிதியில் தேங்காய் உடைத்து இரண்டு மூடிகளிலும் நல்லெண்ணெய் ஊற்றி எள்ளு முடிச்சு தீபம் ஏற்றவும்.
சிவன் கோயிலில் கால பைரவரையும், விஷ்ணு கோயிலில் சக்கரத்தாழ்வாரையும் வழிபட செய்வினை தோஷம் நெருங்காது.

*சிவன் கோயில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற விரைவில் நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகமாகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ளதாக ஐதீகம் உண்டு.

*பிரதோஷங்களில், ரிஷப ரூட மூர்த்தியாய், மகேசனை தேவியுடன் வழிபடுவோர் 1000 அஸ்வமேத யாகங்களை செய்த பலனை பெறுவார்கள். அதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப்படும் தீபாராதனையை பார்த்தால் எல்லா நோய்களும், வறுமையும் நீங்கும் என்பது ஐதீகம்.

Exit mobile version