Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை! அவரிடம் தீவிர விசாரணை!

Spokesperson Tamilan Prasanna's wife commits suicide! Serious investigation of him!

Spokesperson Tamilan Prasanna's wife commits suicide! Serious investigation of him!

செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை! அவரிடம் தீவிர விசாரணை!

தொலைக்காட்சி விவாதங்களில் பிரபலமானவர் வழக்கறிஞர் தமிழன் பிரச்சன்னா திமுகவின் செய்தி தொடர்பு இணை செயலாளராக உள்ள அவர், திமுக சார்பில் பல தொலைக்காட்சி ஊடக விவாதங்களில் கலந்து கொண்டு பேசுவார். மு.கருணாநிதி இருந்த போதே அவர் திமுக தலைமையுடன் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் அவர் அவ்வப்போது பல கட்டப் பஞ்சாயத்துகளிலும் சிக்கியுள்ளார். அவரின் ஆடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

தற்போது நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் பா.ஜா.கா தமிழகத்தில் ஒரு தொகுதியில் வெற்றி அடைந்தால் தான் தற்கொலையே செய்வேன் என தமிழன் பிரசன்னா கூறிய நிலையில் தற்போது அவரது மனைவி இறந்ததை கேட்டு தி.மு.க கட்சியில் அனைவரும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழர் பிரசன்னாவின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியாகி உள்ளது. அவர் அவரது மனைவியுடன் வாழ்ந்து வந்த நிலையில் திடீரென்று அவரது மனைவி, கொடுங்கையூரில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்திகள் கூறப்படுகிறது.

இதுகுறித்து விசாரணை நடத்த போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும் அவர் தற்கொலைக்கான காரணம் குறித்தும், அவர் கடிதம் ஏதேனும் எழுதி வைத்துள்ளாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version