Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எல்லையை தாண்டி வரவைத்த விளையாட்டு காதல்!! 4 குழந்தைகளின் தாய் செய்த விபரீத செயல்!! 

எல்லையை தாண்டி வரவைத்த விளையாட்டு காதல்!! 4 குழந்தைகளின் தாய் செய்த விபரீத செயல்!! 

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நொய்டா நகரின் ரபுபுரா என்ற பகுதியை சேர்ந்த இளைஞன் சச்சின். இவர் அங்குள்ள மளிகை கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

சச்சின் ஆன்லைனில் பப்ஜி விளையாட்டு விளையாடுவது வழக்கம். இந்த சூழ்நிலையில் சச்சினுக்கும் ஆன்லைனில் பஜ்ஜி விளையாடி வந்த பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள சீமா ஹைதர் என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. சீமாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 4 குழந்தைகள் உள்ளனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பானது பின்னர் காதலாக மாறியது.

ஒரு கட்டத்தில் சீமா தனது காதலனான சச்சினை பார்க்க விரும்பியுள்ளார். இதற்காக அவர் தனது கணவரை கைவிட்டு 4 குழந்தைகளுடன் பாகிஸ்தான் நாட்டில் இருந்து கிளம்பியுள்ளார்.

சீமா முதலில் தனது குழந்தைகளுடன் நேபாள நாட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து கடந்த மாதம் பஸ் மூலம் உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டா நகரில் உள்ள ரபுபூரா பகுதிக்கு சச்சினிடம் வந்து சேர்ந்தார்.

பின்னர் சச்சினும் சீமாவும் வாடகை வீடு ஒன்றை எடுத்து தனது குழந்தைகளுடன் கிரேட்டர் நோய்டாவில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பெண் ஒருவர் தங்கி இருந்த செய்தி உளவுத்துறை மூலம் உத்தரப்பிரதேச போலீசாருக்கு தகவல் வரவே அவர்கள் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சீமா பாகிஸ்தானை சேர்ந்தவர் என்பதும் அவர் தனது 4 குழந்தைகளுடன் தனது பப்ஜி காதலன் சச்சினை தேடி இந்தியாவிற்கும் வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த பாகிஸ்தானை சேர்ந்த சீமா மற்றும் அவரது நான்கு குழந்தைகளையும் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version