இலங்கையில் அவசரநிலை பிரகடனம் அறிவிப்பு! மக்களுக்கு கடும் கட்டுப்பாடு!

0
148
Sri Lanka declares state of emergency Strict control over people!

இலங்கையில் அவசரநிலை பிரகடனம் அறிவிப்பு! மக்களுக்கு கடும் கட்டுப்பாடு!

நமது அண்டை நாடான இலங்கையில் பொருளாதாரம் சமீபத்தில் சில ஆண்டுகளாக பெரும் சிக்கலை சந்தித்து வருகிறது. இந்த கொரோனா சூழல் நாட்டின் பிரதான வருவாய்த்துறையான  சுற்றுலா துறையின் முடக்கம் போன்றவை இந்த பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இது போன்ற காரணங்களால் அந்நியச் செலவாணி இருப்பு குறைந்து உள்ளது. அதன் காரணமாக இலங்கையின் ரூபாயின் மதிப்பு வெகுவாக சரிந்துள்ளது.

இதனால் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. உணவு பொருட்கள் குறைவதாலும், பதுக்கல் அதிகரிப்பதாலும் நாட்டில் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அவற்றின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து உள்ளது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில் உணவுப் பொருட்களின் பதுக்கலை தடுக்கவும், அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்கவும் நாட்டில் பொருளாதார அவசரநிலையை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம் அரிசி, சர்க்கரை போன்ற முக்கிய உணவுப் பொருட்களின் விலையை நியாயமான விதத்தில் பராமரிக்க முடியும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ராணுவ தளபதி ஒருவரை அத்தியாவசிய சேவைகள் கமிஷனர் ஆகவும் அரசு நியமித்துள்ளது. இதன் மூலம் வியாபாரிகள், சில்லரை வர்த்தகர்கள் உணவுப் பொருட்களை பறிமுதல் செய்யவும், அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும் அவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அரிசி சர்க்கரை போன்ற உணவுப் பொருட்களை கொள்முதல் செய்து மக்களுக்கு நியாயமான விலையில் அந்த பொருட்களை வழங்குவதற்கு என நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும், ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.