Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இலங்கையில் வரும் 17ஆம் தேதி விவாதிக்கப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானம்! பதவியில் நீடிப்பாரா கோத்தபய ராஜபக்சே?

நம்முடைய அண்டை நாடான இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலைமை ஏற்பட்டு வருவதால் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் விலை உயர்வை சந்தித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

இந்த விலை உயர்வு காரணமாக, விரக்தியடைந்த இலங்கை மக்கள் இலங்கையின் அரசியல்வாதிகள் அனைவரையும் ஓட, ஓட, விரட்டி வருகிறார்கள். அதோடு ராஜபக்சேவின் குடும்பம் இலங்கை அரசியலிலிருந்து விடுபட வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இலங்கையின் அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபக்சேவும், இலங்கையின் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்சவும், உடனடியாக பதவி விலக வேண்டும் என்று தெரிவித்து இலங்கைவாழ் மக்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள்.

அதோடு சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களால் அடித்து விரட்டப்பட்டனர். மேலும் இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீடு தீக்கிறையாக்கப்பட்டது இது அங்கு மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தநிலையில் இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அதோடு பிரதான எதிர்க் கட்சியான என்ஜேபி கட்சி அதிபருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தாக்கல் செய்திருந்தது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக பிரதமர் பதவியிலிருந்து ராஜபக்ஷே விலகியதை தொடர்ந்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இலங்கை நாட்டின் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நாடாளுமன்ற கட்சியின் பிரதிநிதிகளுடன் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபயவர்தனா நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்கு எடுக்குமாறு கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்தார்கள்.

அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் வருகின்ற 17 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் இந்த தீர்மானம் மீது விவாதம் நடத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்றத்தின் சிறப்பு ஒப்புதல் பெற்று இந்த தீர்மானம் மீது விவாதம் நடத்தப்படும் என்று தகவல் கிடைத்திருக்கிறது.

இதைத் தவிர நாட்டில் நிலையான அரசு அமைக்க வேண்டும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், என்பன போன்ற பரிந்துரைகளும் இந்த கூட்டத்தில் கட்சி தலைவர்கள் மூலமாக முன்வைக்கப்பட்டது. இவற்றை அதிபரிடம் ஒப்படைக்கப்படும் என்று சபாநாயகர் அதன்பிறகு தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version