செப்டம்பர் அல்லது அக்டோபரில் இலங்கை அதிபர் தேர்தல்!! ம.வி.மு தலைவர் அனுர குமார திசாநாயக்க அறிவிப்பு!!
இலங்கை நாட்டில் வரும் செப்டம்பர் மாதம் இறுதியில் அல்லது அக்டோபர் மாதம் தொடக்கத்தில் அதிபர் தேர்தல் நடைபெறும் என்று மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க தற்பொழுது அறிவித்துள்ளார்.
இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்கள் விடுதலை முன்னணி தலைவருமான அனுர குமார திசாநாயக்க அவர்கள் ஸ்வீடன் நாட்டில் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்பொழுது உயிரத்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாகவும் இலங்கை அதிபர் தேர்தல் குறித்தும் பேசினார்.
மேலும் அந்த கூட்டத்தில் தொடர்ந்து பேசிய அனுர குமார திசாநாயக்க அவர்கள் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே அணியாக இணையலாம் என்றும் கூறினார். இதையடுத்து தேர்தல் குறித்து அனுர குமார திசாநாயக்க அவர்கள் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் “இலங்கையில் அதிபர் தேர்தல் செப்டம்பர் 28ம் தேதி அல்லது அக்டோபர் 5ம் தேதி நடைபெறும். 2019ம் ஆண்டு ராஜபக்சே அவர்களுக்கு வழங்கிய ஆதரவைப் போலவே எனக்கும் நீங்கள் பெரும் ஆதரவை வழங்க வேண்டும்” என்று பேசினார்.
இலங்கை நாட்டில் அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த, ரணில், சந்திரிக்கா போன்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணையவுள்ளனர். எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைவதற்கான திட்டங்களை ஏற்கனவே வகுத்து வருகின்றனர்.