கமல் ரஜினி கூட்டணியில் குழப்பம் விளைவிக்கும் பிரபல நடிகை!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் கடந்த 40 ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தாலும், இருவரும் கொள்கை அடிப்படையில் முற்றிலும் வேறுபாடானவர்கள். ரஜினி ஆன்மீக அரசியலை முன்வைக்கும் நிலையில், கமல் பகுத்தறிவு அரசியலை முன்வைத்து அரசியல் செய்து வருவதால் இருவரும் அடிப்படையிலேயே வேறுபட்டவர்கள். இருப்பினும் அதிமுக, திமுக என இரண்டு திராவிட கட்சிகளின் கூட்டணியை எதிர்க்க இரண்டு பேரும் இணைய வேண்டும் என்று இரு தரப்புக்கும் நெருக்கமானவர் கூறிய காரணத்தால், தற்போது இருவரும் இணையும் சூழல் ஏற்பட்டுள்ளது
கமல் மற்றும் ரஜினி இணைந்து வரும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும், முதல் கட்ட பேச்சுவார்த்தையில் பாசிட்டிவான கருத்துக்கள் பகிரப்பட்டதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் வெண்ணை திரண்டு வரும்போது தாழி உடைவது போல் மக்கள் நீதி மையத்தின் நிர்வாக உறுப்பினர்களில் ஒருவரான நடிகை ஸ்ரீபிரியா கமல் மற்றும் ரஜினி ஒருவேளை இணைந்தால் கமல்ஹாசன்தான் முதல்வர் வேட்பாளர் என்பது என்னுடைய கருத்து என்று ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். இந்த கருத்து இரு தரப்பிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது
முதலில் இரு தரப்பினரும் இணைந்து, தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் தான் ஆட்சி அமைப்பது குறித்தும் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் பேச வேண்டும் என்றும், இணைப்பு நடக்கும் முன்னரே முதல்வர் வேட்பாளர் குறித்து பேசி இணைப்புக்கு இடைஞ்சலாக ஸ்ரீபிரியா இருப்பதாகவும் இரு தரப்பில் உள்ள அனுதாபிகள் கூறிவருகின்றனர்
ஏற்கனவே ஸ்ரீபிரியாவை கமல்ஹாசன் தனது கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளதாக கூறப்படும் நிலையில் கமல்ஹாசனை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே ஸ்ரீபிரியா இவ்வாறான கருத்துக்களை தெரிவித்துள்ளதாகவும் ஒரு வதந்தி பரவி வருகிறது.