Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழக முதல்வரை கிண்டல் செய்த ரஜினி-கமல் பட நாயகி!

Edappadi Palanisamy-News4 Tamil

Edappadi Palanisamy-News4 Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோருடன் இணைந்து நடித்த நடிகைகளில் ஒருவர் ஸ்ரீபிரியா. கடந்த 80களில் இவர் தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோயினாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது அவர் கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியின் முக்கிய பொறுப்பாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை ஸ்ரீபிரியா தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை கிண்டல் செய்து ஒரு டுவிட்டை பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பேட்டி ஒன்றில் ’கமல்ஹாசன் யாரோ எழுதிக் கொடுத்ததை படிக்கிறார். அவருக்கு ஒன்றும் தெரியாது’ என்று கூறியிருந்தார். இது குறித்து கருத்து கூறிய நடிகை ஸ்ரீபிரியா ’ஐயோ ராமாயணம் எழுதியது யார் சொல்லுங்க பார்ப்போம்’ என்று கிண்டலடித்துள்ளார்

ஏற்கனவே கூட்டமொன்றில் பேசிய தமிழக முதல்வர் ’ராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார்’என்று கூறியது அனைவருக்கும் நினைவிருக்கலாம். இதனை வைத்தே ஸ்ரீபிரியா தற்போது கிண்டல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Exit mobile version