Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஸ்ரீரங்கம் ஆடிப்பூர உற்சவ விழா!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பம் ஆனது முதல் ரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறுகின்றது. நோய் தொற்று பரவல் காரணமாக, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பம் ஆனது. முதல் ரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும், நடைபெறுகின்றது .நோய் தொற்று காரணமாக கோவில்கள் மூடப் பட்டிருப்பதால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

ஆடிப்பூர உற்சவத்தின் மூன்றாவது நாளான சென்ற 4 ஆம் தேதி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பரமபத நாதர் சன்னதியில் இருக்கின்ற கண்ணாடி அறையில் மூலவர் ஆண்டாளுக்கு திருப்பாற்கடல் நாதன் அலங்காரமும், உற்சவருக்கு கண்ணன் ஆண்டாளின் சிற்றில் சிதைத்தல் அலங்காரம் செய்யப்பட்டது.ஆண்டாள் திரு ஆடிபூர உற்சவத்தின் நான்காம் நாளான 5ம் தேதி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பரமபத நாதர் சன்னதியில் இருக்கின்ற கண்ணாடி அறையில் மூலவர் ஆண்டாளுக்கு பரவ சுவாமி அலங்காரம் உற்சவருக்கு கள்ளழகர் அலங்காரமும் செய்யப்பட்டு இருந்தது.

ஆண்டாள் திரு ஆடிபூர உற்சவத்தின் எட்டாம் நாளான நேற்று முன்தினம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பரமபத நாதர் சன்னதியில் இருக்கின்ற கண்ணாடி அருகில் மூலவர் ஆண்டாளுக்கு ராஜகோபாலன் அலங்காரமும், உற்சவருக்கு ஸ்ரீராமர், அகல்யா சாப விமோசனம் அலங்காரமும் செய்யப்பட்டு இருந்தது. இந்த விழாவில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிகழ்ச்சியை இணையதளத்தின் கண்டு களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

Exit mobile version