பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹச்.ராஜாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு.!!

0
146

பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற கூட்டமொன்றில், முன்னாள் பா பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா அவர்கள் இந்து அறநிலை துறை அதிகாரிகள் குறித்தும், அவர்களது வீட்டு பெண்களை அவமதிக்கும் வகையிலும் பேசியதாக விருதுநகரை சேர்ந்த ஒருவர் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, இந்த புகாரின் பேரில் எச் ராஜா மீது இந்திய தண்டனை சட்டம் 505 (3) பொது இடத்தில் அவதூறாக பேசுதல், 294 (பி) ஆபாசமாக பேசுதல், 353 அரசு பணி செய்ய இடையூறு ஏற்படுத்துதல் மற்றும் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் கோட்டார் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த அவதூறு வழக்கில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும், நேற்றைய விசாரணையின்போது நீதிமன்றத்தில் எச் ராஜா ஆஜராகாததை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எச் ராஜா இதற்கு முன் சமூக ஊடகங்களில் தமிழக முதல்வர் ஸ்டாலின், பெரியார் திராவிட கழகம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு உட்பட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவை நீதிமன்றங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.