Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாவட்ட குழந்தைகள் நலக்குழு அலுவலகத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!

சென்னை மத்திய மண்டல குழந்தைகள் நல ஆணையத்தில் பணிபுரிய உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பதவியினை தொகுப்பூதியம் அடிப்படையில், நிரப்பப்படவுள்ளதால், அதற்கு விண்ணப்ப படிவத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

தகுதி வாய்ந்த நபர்கள் மேலே குறிப்பிடப்பட்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் 15 நாட்களுக்குள் கீழ்க்கண்ட முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பம் செய்ய வேண்டும்.

காலிபணியிடம் உதவியாளர் – உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர்-௦1

தகுதி 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 05/09/2022

தொழில் நுட்பத் தகுதி 1. தட்டச்சு – தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.2.கணினி அறிவு (சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்)

வயது 40 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது.
தொகுப்பூதியம் ரூபாய். 11, 916

விண்ணப்பங்கள் பெற மற்றும் அனுப்ப முகவரி :

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,

எண்.58, சூரிய நாராயண சாலை,

இராயபுரம், சென்னை – 13

தொ.பேசி.எண்.044-25952450.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேலே குறிப்பிடப்பட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தினடிப்படையில் நியமனம் அமையும். இது தொடர்பாக அரசின் முடிவே இறுதியானது.

Exit mobile version