தருமபுரி அருகே தேங்கிய மழைநீர்! 60 அடி கிணற்றுக்குள் விழுந்த கார்! குடும்பத்தை சிதைத்த விபத்து!

0
161
Stagnant rainwater near Dharmapuri! The car that fell into the 60-foot well! Accident that shattered the family!

தருமபுரி அருகே தேங்கிய மழைநீர்! 60 அடி கிணற்றுக்குள் விழுந்த கார்! குடும்பத்தை சிதைத்த விபத்து!

தர்மபுரி மாவட்டத்தில் காரிமங்கலம் அருகே பொன்னேரி என்ற இடத்தில் விவசாய கிணற்றுக்குள் விழுந்ததன் காரணமாக ஒரு குடும்பமே சிதைந்து விட்டது. அதில் தந்தை மற்றும் மகள் பரிதாபமாக பலியாகிவிட்டனர். தாய் நீந்தி மேலே வந்து உயிர் தப்பிவிட்டார். கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு லிங்கா நகரை சேர்ந்தவர் வீரா. 42 வயதான இவர் அதே பகுதியில் தனியார் ஜவுளி நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

அவருடைய மனைவி உமாலட்சுமி. 32 வயதான இவர் மற்றும் இவருடைய மகள் சுஷ்மிதா என்ற 13 வயதான குழந்தை மூவரும் உமாலட்சுமியின் தங்கை வீட்டிற்கு சென்றுள்ளனர். அவரது வீடு சேலம் மாவட்டத்தில் மேட்டூரில் உள்ளது. மேலும் அந்த குழந்தை ஏழாம் வகுப்பு படித்து வருகிறாள். இந்நிலையில் அவர்கள் மூவரும் காரின் மூலமாக உமாவின் தங்கை வீட்டிற்கு வந்துவிட்டு, பின்னர் நேற்று மாலை கார் மூலமே திரும்பவும் பெங்களூர் சென்றனர்.

அப்போது வீரா வாகனத்தை ஓட்டினார். தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே பொன்னேரி என்ற இடத்தில் வந்த போது முன்னால் சென்ற லாரி ரோட்டில் தேங்கி நின்ற மழை நீர் பள்ளத்தின் காரணமாகவும், சேற்றில் இறங்கி அதன் சக்கரங்கள் சிக்கி கொண்டதன் காரணமாகவும், மழைநீர் பள்ளத்தின் வழியாக சென்றது.

எனவே அதன் காரணமாக தண்ணீர் சாலை முழுவதும் பீய்ச்சியடித்தது. இதனால் பின்னால் வந்த கார் கண்ணாடி முழுவதும் தண்ணீர் சிதறியது. இதில் நிலைதடுமாறிய அந்த வாகனம் சாலையோரத்தில் இருந்த செவத்தான் என்பவருக்குச் சொந்தமான 60 அடி ஆழ விவசாய கிணற்றுக்குள் தடுப்புகளை உடைத்துக்கொண்டு சீறிப் பாய்ந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக காரின் கதவு திறந்து கொண்டது.

அதன் காரணமாக உமா நீந்தி மேலே வந்து விட்டார். அதன் பின்னர் அவர் அருகில் உள்ளோரிடம் விஷயத்தை கூறிவிட்டு அவர் மயக்கமடைந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீஸார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து பொதுமக்களின் உதவியுடன் காரை மீட்கும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்ட போதிலும் கிணற்றில் தண்ணீரின் அளவு அதிகமாக இருந்ததன் காரணமாக வீரா மற்றும் சிறுமியை மீட்க முடியவில்லை.

இதையடுத்து அவர்கள் மின்மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணிகளில்  மேற்கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் கலைச்செல்வன், எம்எல்ஏக்கள் கே.பி. அன்பழகன், சம்பத்குமார் திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் இன்பசேகரன், தடங்கம் சுப்பிரமணி, செந்தில்குமார் எம்.பி ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டு மீட்பு பணியகளை துரிதப்படுத்தினர்.

அப்போது தந்தை மகள் இருவரும் தண்ணீரில் மூழ்கி பலியாகி விட்டனர். அவர்களது 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவர்களது உடல்களை மட்டுமே மீட்க முடிந்தது. மேலும் அந்த உடல்களை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சென்று கொண்டிருந்த வாகனம் கிணற்றுக்குள் பாய்ந்து தந்தை, மகள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.