திருமாவளவனுக்கு வக்காலத்து வாங்கும் ஸ்டாலின்…! அவர் இவ்வளவு வன்மம் நிறைந்தவரா…!

0
101

திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்திருப்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் காவல்துறையின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்திருக்கின்றார்.

இது சம்பந்தமாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீதான எடப்பாடி அரசின் சைபர் கிரைம் காவல்துறையினர் ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருப்பது முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையின் வன்மம் நிறைந்த செயல்பாடு என்று தான் காட்டுகிறது என தெரிவித்திருக்கிறார்.

திருமாவளவன் ஐரோப்பிய பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் சார்பாக நடைபெற்ற இணையவழி கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்றபோது அண்ணல் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் காலம்காலமாக என்ன கருத்துக்களை தெரிவித்து வந்தார்களோ அந்த வரலாற்றை தான் எடுத்துரைத்து இருக்கின்றார் பெண்களின் உரிமைகளையும் பல ஆண்டுகளாக மருத்துவரும் சமூகத்தை மேற்க்காட்டி பேசி இருக்கின்றார்.

அதையேதான் அம்பேத்கரும் பெரியாரும் தாங்கள் வாழ்ந்த நாட்களில் தெரிவித்து வந்தார்கள் இது சம்பந்தமாக திருமாவளவன் பேசியதை பொய்யாகக் கற்பனை செய்து சமூக வலைதளங்களில் வீணாக பரப்பி வருகிறார்கள் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட நினைக்கும் சில சமூக விரோத அரசியல் சக்திகள் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பில் இருக்கும் காவல்துறை அதற்கு எதிர்மறையாக செயல்பட்டிருப்பது கண்டனத்திற்குரிய ஒரு செயலாகும் திருமாவளவன் மீது போடப்பட்டிருக்கும் வழக்கினை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்து இருக்கின்றார்.

திமுக கூட்டணிக்குள் பிரச்சனையை உருவாக்க இதனை ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்தி கொள்ள நினைக்கும் சமூக விரோத மதவெறி கும்பல்களின் கனவு பலிக்காது எனவும் தெரிவித்திருக்கின்றார் திமுக ஆட்சிக் காலத்தில்தான் பெண்களுக்கான சொத்துரிமை வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உரிமை ஆகிய அனைத்தும் ஆண்களுக்கு சமமாக வழங்கப்பட்டது என்று தெரிவித்திருக்கிறார்.