ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! இணைய சேவை மூலம் ரெம்டெசிவிர்!
கொரோனா தொற்றானது இந்த ஆண்டு 2-ம் அலையாக உருமாறி மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.சென்ற ஆண்டை விட இவ்வாண்டு அதிக அளவில் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.மக்கள் இந்த கொரோனாவின் 2-ம் அலையிலிருந்து மீண்டு வர பெருமளவுமுயற்சி செய்து வருகின்றனர்.மத்திய மாநில அரசும் மக்களுக்கு ஒத்துழைப்பு தரும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் ரஷ்யா போன்ற வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இறக்குமதி செய்யப்பட்டது.
கொரோனாவின் 2-வது அலையினால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் தடுப்பூசி மருந்தை உபயோகிக்குமாறு கூறியுள்ளனர்.அதன் அடிப்படையில் முதலில் ரெம்டெசிவிர் மருந்து அரசு கீழ்பாக்கம் மருத்துவமனையில் வழங்கி வந்தனர்.இந்த மருந்துக்கு அதிகளவு தட்டுப்பாடு காணப்பட்டதால் இந்த மருந்தை அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்றுவந்தனர்.இதனை அனைத்தும் தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
மறைமுகமாக கள்ளச்சந்தையில் தடுப்பூசிகளை விற்பவர்கள்மீது குண்டர்சட்டம் போடப்படும் என்று கூறினர்.அதுமட்டுமின்றி தடுப்பூசிகளை வாங்கும் இடத்தில் அதிக அளவு கூட்டம் கூடுவதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது.இதனை தடுக்கும் விதத்தில் டோக்கன் முறையை மேற்கொண்டனர்.அதிலும் சில தில்லுமுல்லு ஏற்பட்ட நிலையில்தான் உள்ளது.இதனையெல்லாம் கட்டுபடுத்தும் நோக்கில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் புதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளார்.
வரும் 18-5-2021 அன்று முதல் தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் செய்யப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார்.அத்தோடு அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் விவரங்கள் மற்றும் மருந்து குறித்து தேவை அதோடு இதர கோரிக்கைளையும் பதிவிடும் நோக்கில்,இணைய சேவை அமலுக்கு வரவுள்ளது.அந்த இணைய சேவை வழியே தனியார் மருத்துவமனைகள் வைத்த கோரிக்கைகளை பரிசீலனை செய்த பிறகு அவ்மருத்துவமனைக்கான தடுப்பூசி மருந்துகள் ஒதுக்கப்படும்.அதன்பின் அந்த மருத்துவமனையின் பிரதிநிதி ஒருவர் சென்று அந்த மருந்துகளை பெற்றுக்கொள்வார்.அதன்பின் தகுந்த நோயாளிகளுக்கு மட்டும் ரெம்டெசிவிர் தடுப்பு மருந்து வழங்கப்படும்.
தற்போது சென்னை,கோயம்புத்தூர்,சேலம்,மதுரை,திருநெல்வேலி,திருச்சி ஆகிய மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்பட்டு வருகிறது.தனியார் மருத்துவமனை எந்த விலையில் தடுப்பூசி மருந்துகளை பெறுகிறதோ அவ்விலையிலேயே மக்களுக்கும் வழங்குமாறு தமிழக அரசு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது புதிய வகை இணைய சேவையை பயன்படுத்தும்போது அதிக அளவு மோசடி நடக்க வாய்ப்புள்ளதாக இதர கட்சி சுற்று வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி மருந்துகளை விற்பதன் மூலம் தமிழக அரசு பலக்கோடி ரூபாய்களை லாபம் பார்க்க போகிறது என்றும் பேசிவருகின்றனர்.