திமுகவின் “தமிழ் மக்கு” போஸ்டர்! ஆக இப்படித்தான் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதா..? இணையத்தில் விமர்சனம்

0
234

திமுகவின் “தமிழ் மக்கு” போஸ்டர்! ஆக இப்படித்தான் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதா..? இணையத்தில் விமர்சனம்

திமுகவின் செயல்தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் அவரது கட்சியினரால் கொட்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் ஸ்டாலின் பிறந்தநாளுக்கு எழுத்துப்பிழையுடன் ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று கேலி கிண்டலுக்கு வழிவகுத்துள்ளது.

சென்னை மேற்கு மாவட்டம் சேப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த திமுக தொண்டர்கள் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் போஸ்டர் அடித்துள்ளனர். அதில் எங்கள் கழகத்தின் “தமிழ் மக்கு” பிறந்தநாள் வாழ்த்துகள் என்று எழுத்து பிழையுடன் அச்சடிக்கப்பட்டுள்ளது. திமுகவின் பொதுச் செயலாளர் அன்பழகனின் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சை எடுத்துவரும் நிலையில் பிறந்தநாள் கொண்டாட்டம் எதுவும் தேவையில்லை என்று ஸ்டாலின் கூறியிருந்தார்.

ஸ்டாலின் பேச்சை கேட்காமல் பல இடங்களில் கேக் வெட்டியும், அன்னதானம் வழங்கியும், போஸ்டர் ஒட்டியும் பிறந்தநாள் வாழ்த்து கொண்டாடியது பலருக்கு சங்கடத்தை ஏற படுத்தியது. இந்நிலையில் சென்னையில் ஒட்டப்பட்ட மக்கு போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் சமூக வலைதளங்களில் திமுகவையும், ஸ்டாலினையும் பலர் கேலி, கிண்டல் செய்து வருகின்றனர்.