Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற ஸ்டாலின்!!!

MK Stalin Disappointed with DMK IT Wing-News4 Tamil Latest Online Political News in Tamil Today

MK Stalin Disappointed with DMK IT Wing-News4 Tamil Latest Online Political News in Tamil Today

ஜார்க்கண்ட் மாநிலத்தில்  ஐந்து கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பா.ஜ.க தனித்து ஒரு அணியாகவும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜே.எம்.எம் ), காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து மற்றொரு அணியாகவும் தேர்தலை சந்தித்தன. ஆட்சி அமைக்க 42 எம்.எல்.ஏ தேவை படும் என்ற நிலையில் ஜே.எம்.எம் கூட்டணி 47 எம்.எல்.ஏ க்களை பெற்று ஆட்சியை பிடித்தது.

இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11-வது முதல் மந்திரியாக ஹேமந்த் சோரன் (இவர் இரண்டு தொகுதியில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது) இன்று மதியம் பதவியேற்றார். அவருக்கு மாநில கவர்னர் திரவுபதி மர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல் மந்திரிகள் கலந்து கொண்டனர்.

Exit mobile version