மக்களிடம் கூறிய அறிக்கையை மறந்த ஸ்டாலின்! சரமாரியாக கேள்வி எழுப்பும் இபிஎஸ்!
பத்து ஆண்டுகள் கழித்து தற்போது திமுக ஆட்சியைக் கைப்பற்றியது. வழிமுறை மக்களிடம் 500க்கும் மேற்பட்ட அறிக்கைகளை செய்வதாக வாக்குறுதி அளித்தது. அவர் அவர்கள் கூறிய அறிக்கைகளில் ஒன்றுதான் கொரோனா தொற்றால் பொருளாதார அளவில் மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளோம். அதிலிருந்து மேலும் வரை சொத்து வரி ஏதும் அதிகரிக்கக் கூடாது என கூறியிருந்தார். ஆனால் அதனை திமுக தலைவர் ஸ்டாலின் மறந்துவிட்டார் போல, தமிழகத்தின் சொத்து வரி உயர்த்துவது குறித்து சமீபத்தில் அரசு ஆணை வெளிவந்தது.
தானே உயர்த்த மாட்டோம் என்று கூறிவிட்டு தற்பொழுது பொருளாதாரம் மேம்படாத நிலையில் இவ்வாறு கூறியது பெரும் அதிர்ச்சியை கொடுக்கிறது. இவ்வாறு பார்க்கும் பொழுது மக்களிடம் கூறிய அறிக்கைகள் அனைத்தும் வெறும் கண்துடைப்பே என்று தெரியவருகிறது. இந்த சொத்துரிமை உயர்த்துவது குறித்து அனைத்து இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவர் முன்னிலையில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உரையாற்றினார்.
அவ்வாறு அவர் கூறியது, மக்களைப் பற்றி திமுக தலைவர் ஒருபோதும் கவலைப்கொள்வதில்லை. அவருடைய வீட்டு பற்றி மட்டும் தான் அதிக கவலை உள்ளது. நாட்டில் தற்பொழுது எந்த வகையில் நிலவரம் நடக்கிறது என்பதுகூட அவருக்குத் தெரியாமல் உள்ளது. அதுமட்டுமின்றி அவர்கள் கூறிய அறிக்கையில் 487 ஏழாவது அறிக்கையில் இருப்பதே சொத்து வரும் நிறுத்த மாட்டோம் என்பதுதான். ஆனால் அதனை மறந்து தற்பொழுது சொத்துவரி உயர்த்துவது குறித்து அரசாணை வெளியிட்டு உள்ளனர்.
மத்திய அரசும் தற்போது வரை சொத்துவரி உயர்த்தும்படி கூறவில்லை. ஆனால் மத்திய அரசை ஷாக்கு காட்டி தற்பொழுது தமிழக அரசு இந்த அரசாணையை வெளியிட்டு சமாளித்து வருகிறது. அவ்வாறு மத்திய அரசு கூறி இருந்தால் மும்பை மற்றும் கொல்கத்தாவில் வரி உயர்த்தப்பட்டு இருக்கும். ஆனால் தற்போது வரை அந்த மாநிலங்களில் எந்த ஒருவரையும் உயர்த்தப்படவில்லை. என இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.