பிரதமர் வேட்பாளர் இடத்தில் ஸ்டாலின்.. அதிகரிக்கும் தலைவர்கள் ஆதரவு!! கைக்கொடுக்குமா தமிழக வெற்றி!!
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் யாரும் எதிர்பாரா வகையில் இந்தியா கூட்டணியானது பாஜகவை எதிர்த்து பல இடங்களில் வெற்றி பெற்றது.அந்த வகையில் தமிழகத்தில் 40 இடங்களிலும் தங்களது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது. இருப்பினும் பாஜக வெற்றி பெற்ற நிலையில் இன்று இரு கட்சிகளும் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்துவதாக தெரிவித்துள்ளனர்.இது குறித்து அறிவிப்பானது அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.
இந்தியா கூட்டணி தற்போது வரை பிரதமர் வேட்பாளரை அறிவிக்காத நிலையில் இன்று இதன் முடிவு வெளியாகும் என கூறுகின்றனர்.இந்தியா கூட்டணியிலிருந்து ஒரு சில தலைவர்கள் பின்வாங்கிய நிலையில் தற்போது இன்று யார் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது தான் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.அந்த வகையில் உத்தவ் தாக்கரே சிவசேனா ஆகியோர் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.
முடிவுகள் வருவதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்பே மல்லிகார்ஜுனா மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்தனர்.இதனையொட்டி இவர்களும் அதன் வழியே தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் 40 இடத்திலும் வெற்றி வாகை சூடிக்கொடுத்த திமுக ஸ்டாலின் அவர்கள் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா என்ற கேள்வியும் ஒரு பக்கம் இருந்து வருகிறது.
இது குறித்து நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்ட பொழுது, என் உயரம் எனக்கு தெரியும் என்று கலைஞர் கூறியதை நினைவுப்படுத்தி தற்பொழுது பதிலளித்துள்ளார்.இந்த ஆலோசனை கூட்டம் முடிவில் கட்டாயம் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படும் என்று எதிர்பாக்கப்படுகின்றது.