Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முதல்வரை வீட்டிற்குச் சென்று சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன்! உள்ளர்த்தம் என்ன பரபரப்பில் அரசியல் களம்!

தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரியின் துணைநிலை பொறுப்பு ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் நேற்று இரவு திடீரென்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை அவருடைய வீட்டில் சந்தித்து உரையாற்றி இருக்கிறார்.

நேற்றைய தினம் இரவு நடந்த இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று இரண்டு தரப்பினருமே சொல்லிக் கொண்டாலும் அதில் அரசியல் இருக்கிறது என்கின்ற விவாதமும் நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னால் தமிழக பாஜகவின் தலைவராக பொறுப்பு வகித்தவர் தமிழிசை சௌந்தரராஜன் 2019 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் திடீரென தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம் செய்யப்பட்டார். அதன் பிறகு சமீபத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆக நியமனம் செய்யப்பட்டார்.

இச் சந்திப்பு தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜனுக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரணை செய்த சமயத்தில் நேற்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் தங்கியிருந்தார். தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் ஸ்டாலின் அவர்கள் இருக்கவில்லை. ஆகவே அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்து விடலாம் என்று எண்ணி அதற்காக சந்தித்திருக்கிறார் தமிழ்நாட்டைச் சார்ந்த அரசியல் புள்ளி என்பதை தவிர்த்து இதில் வேறு எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை என்று தெரிவிக்கிறார்கள்.

இருந்தாலும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சென்ற 18ஆம் தேதி டெல்லியில் சந்தித்து விட்டு வந்திருக்கின்றார். சூழ்நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்து சுமார் இரண்டு தினங்கள் ஆகி இருக்கிற சூழ்நிலையில், திடீரென ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழக முதல்வரை சந்தித்து இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

இருந்தாலும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து விட்டு வந்து இரண்டு தினங்களில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முதலமைச்சரை சந்தித்து இருப்பது பல யூகங்களை கிளப்பி இருக்கின்றது. பொதுவாகவே ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அரசியல் சாசன பொறுப்பேற்று ஐதராபாத்திற்கு சென்று விட்டாலும் தமிழ்நாட்டு அரசியல் சூழலைப் பற்றி கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. அவரிடம் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு அரசியல் சூழல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை பெற்று இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்புக்கு மரியாதை நிமித்தமாக என்ற செயலை தாண்டிய ஏதாவது ஒரு உள்ளர்த்தம் இருக்குமா என்ற விவாதம் தமிழக பாஜக உட்பட அனைத்து கட்சியினர் இடமும் நடைபெற்று வருவதாக தெரிகிறது.

முதலமைச்சர் மற்றும் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்டோரின் சந்திப்பு தொடர்பாக தமிழக பாஜகவினரும் ஆர்எஸ்எஸ் அமைப்பினரும் நேற்றைய தினம் இரவே வாட்ஸ்அப் மூலமாக விவாதம் செய்து இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. தற்போது நாட்டின் சூழல் இருக்கும் நிலையில் அரசியல்வாதிக்கு இணையாக ஆளுநர்களும் அரசியல் செய்து வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் தெலுங்கானா ஆளுநர் உள்ளிட்டோரின் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பல பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள்.

Exit mobile version