தேதி குறித்த ஸ்டாலின்.. எல்லாமே தலைகீழாகப் போகுது!! அமைச்சர்களுக்கு வரும் ஆப்பு!!
முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிற்கு சென்று அங்குள்ள தொழிலதிபர்களை சந்தித்து வெளிநாட்டு மூலதனத்தை தமிழகத்திற்கு கொண்டு வர இருப்பதாக பல தகவல்கள் வெளியானது. இவர் ஜூலை மாதம் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மருத்துவ ரீதியான பரிசோதனைக்கு சென்றதால் தேதி குறிப்பிடாமல் இவரது பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் வெளிநாட்டிற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் அமைச்சரவையில் மாற்றம் உண்டாகும் என பலரும் கூறி வருகின்றனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய் விவகாரம் மாநில தலைவர் கொலை வழக்கு , கஞ்சா ஊடுருவல் என பல பிரச்சனைகளில் திமுகவின் தலை ஓங்கி நிற்கிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இவை அனைத்தும் ஆட்சி ஒழுங்கின்மை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறது.
இதனை மாற்ற வேண்டுமென்றால் பரீட்சியமிக்க மற்றும் மக்கள் ஆதரவு கொடுக்கும் அமைச்சர்களை பெரிய பதவிகளில் உட்கார வைக்க வேண்டும் என்று ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். அந்த வரிசையில் முதலாவதாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பதவிக்கு அமர்த்தப்படலாம். மேற்கொண்டு மின்சாரம் மற்றும் அமலாக்கத்துறை, போக்குவரத்து துறை என அனைத்திலும் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் பல அமைச்சர்களின் இலக்காகக்கள் கட்டாயம் மாற்றம் செய்யப்படும். குறிப்பாக துணை முதல்வர் பதவியில் உதயநிதி அமர்த்தப்பட உள்ளதால் இளம் தலைக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் என்று கூறுகின்றனர். ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின விழாவிற்கு பிறகு ஸ்டாலின் அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் அதற்குள் அமைச்சரவையில் மாற்றம் வந்துவிடும் என கூறுகின்றனர்.