Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஸ்டாலின் தேவையில்லாமல் பேசுகிறார்…! உதாசீனம் செய்த அமைச்சர்…!

நடிகர் விஜய் அவர்களின் மக்கள் இயக்கம் என்ற அமைப்பு அரசியல் கட்சியாக மாற்றப்படுமானால், அதை நாங்கள் வரவேற்போம் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்திருக்கிறார்.

ஆவடி ஜே.பி எஸ்டேட் அருகில் சரஸ்வதி நகர் பகுதியில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றது. இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக, வந்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆய்வுகளை முடித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது ஐந்து முக்கிய அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்து பேசிய பிறகு அமைச்சர்கள் ஒரு நல்ல முடிவு வெளியாகும் என்று தெரிவித்து இருக்கிற நிலையில், 7.5% இட ஒதுக்கீட்டை பெறுவதற்காக எங்களுடன் இணைந்து போராடுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இருக்கிறது என்று தெரிவித்திருப்பது, அனாவசியமான ஒன்று எனவும், ஸ்டாலின் போராடுவதற்கு பல பிரச்சினைகள் இருக்கின்றன எனவே அவர் அந்த பிரச்சினைகளுக்காக போராட்டம் நடத்தட்டும் என தெரிவித்து இருக்கிறார்.

அத்துடன் நடிகர் விஜயின் தகப்பனாரும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் விஜய் அவர்களின் மக்கள் இயக்கம் தேவைப்படும் சமயத்தில் அரசியல் கட்சியாக மாற்றப்படும் என்று கூறியது பற்றி கேட்டதற்கு, நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் என்ற அமைப்பு அரசியல் கட்சியாக மாற்றப்பட்டால், அதை நாங்கள் வரவேற்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version