சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை; ஒரே வார்த்தையில் ஸ்டாலினை ஆஃப் செய்த சபாநாயகர்!!

0
134

சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை; ஒரே வார்த்தையில் ஸ்டாலினை ஆஃப் செய்த சபாநாயகர்!!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற கோரிய ஸ்டாலினை ஒரே வார்த்தையில் முடியாது என்று அவரது கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தார். வண்ணாரப் பேட்டை சம்பவம் குறித்து பேசலாம் என்றும் தெரிவித்தார்.

சில தினங்களாக சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் CAA சட்ட திருத்தத்திற்கு எதிராக திவீர போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னை வண்ணாரப் பேட்டையில் நடந்த தடியடி சம்பவம் மற்றும் கைது செய்த சம்பவமும் போராட்டத்தை அதிகப்படுத்தியது.

இது குறித்து சட்டசபையில் ஸ்டாலின் பேசுகையில்; குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், சென்னை வண்ணாரபேட்டையில் அமைதியாக நடந்த போராட்டத்தில் தடியடியை தூண்டியது யார் என்றும், சம்பவ இடத்திற்கு சென்று தமிழக முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

இதனை கேட்ட சபாநாயகர் தனபால், CAA குறித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற “முடியாது” என்று ஒரே வார்த்தையில் ஸ்டாலினை ஆஃப் செய்தார். தடியடி நடந்த சம்பவம் குறித்து பேசலாம் ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட மனுவை பற்றி விவாதிக்க முடியாது என தீர்க்கமாக தெரிவித்தார். நீதிமன்ற விசாரணை நிலுவையில் இருப்பதால் அதைப்பற்றி விவாதிக்க வாய்ப்பில்லை என கூறினார். இதுகுறித்து ஸ்டாலினுக்கு எழுத்துப்பூர்வமான பதில் அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதற்கு பின்னர் பேசிய முதல்வர் எடப்பாடி; வண்ணாரபேட்டை சம்வத்தில் தொடர்பே இல்லாத ஒரு முதியவர் இறந்ததாக வதந்தியை பரப்பி தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தை தூண்டிவிடுவதாகவும் இதில் சில விஷமிகள் வேண்டுமென்ற செயல்பட்டதாகவும் பேசினார். போராட்ட இயக்கத்தினரை எடப்பாடி ரகசியமாக சந்தித்து குடியுரிமை சட்ட திருத்தத்தால் இசுலாமியர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது.