Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சமூக நீதியே வென்றது! ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!

7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை 45 நாட்களுக்கு பின் கலந்தாய்வு நடத்துவதற்கான காலம் நெருங்கிக் கொண்டே வரும் இந்த நேரத்தில் வேறு வழி தெரியாமல் ஒப்புதல் கொடுத்த ஆளுநர் அவர்களுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்து இருக்கின்றார்.

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு 75 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது இது சம்பந்தமான சட்ட மசோதா ஆளுநரின் பரிசீலனையில் இருக்கும் நிலையில், இப்போதிருக்கும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி கொள்கை முடிவை அறிவித்து அரசாணை வெளியிட்டு இருக்கின்றது.

இந்த நடவடிக்கைக்கு, அரசியல் கட்சி தலைவர்கள் சட்டரீதியாக அரசாணை செல்லுபடியாகுமா என்ற கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.

இந்த நிலையில் இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வாங்கி இருக்கிறார். இது தாமதமான முடிவு என்றாலும் இந்த முடிவை பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்று இருக்கின்றன.

இது சம்பந்தமாக திமுக தலைவர் ஸ்டாலின் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்ற அறிக்கை ஒன்றில் மருத்துவ படிப்பிற்கான அரசு பள்ளி மாணவர்களின் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க 45 நாட்களுக்கு பிறகு ஆளுநர் ஒப்புதல் வழங்கி இருக்கிறார் அதற்கு திமுக சார்பாக நன்றிகள் என்று தெரிவித்திருக்கின்றார்.

நாங்கள் நடத்திய ஆர்ப்பாட்டமும் சென்னை உயர்நீதிமன்றம் வைத்த வேண்டுகோள்களும் ஆளுநரின் மனமாற்றத்திற்கு காரணமாக இருந்திருக்கும், எதுவாக இருந்தாலும் சரி இந்த விஷயத்தில் சமூக நீதிதான் வென்றிருக்கிறது எப்போதும் அதுவென்று கொண்டு தான் இருக்கும் என்று ஸ்டாலின் தெரிவித்திருக்கின்றார்.

Exit mobile version