ஆட்சியாளர்கள் அனைவரையும் கட்டம் கட்டிய ஸ்டாலின்! தேர்தல் வரை காத்திருங்கள் என்று எச்சரிக்கை!

0
166

நாமக்கல் மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் எடப்பாடி ஆட்சியில் மருத்துவமனை டெண்டர்களிலும், தலைவிரித்தாடும் ஊழலை அம்பலப்படுத்தி இருக்கின்றது. என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

நாமக்கல் மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டிடத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததில், 5 பேர் படுகாயம் அடைந்ததாக தெரியவந்திருக்கிறது, இந்த செய்தி எடப்பாடி ஆட்சியில் மருத்துவமனை சென்டர்களில் செய்து கொண்டிருக்கும் ஊழலை வெளிக்கொண்டு வந்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் மு.க ஸ்டாலின்.

இங்கே அரசு மருத்துவக் கல்லூரி கட்டும் பணி ஒரு ரூபாய் மதிப்பிற்கான பணி அல்ல 350 கோடி ரூபாய் செலவில் டெண்டர் விடப்பட்டுள்ளது என்று செய்தி வந்திருக்கிறது 60 சதவீத பணிகள் நிறைவு பெற்றுவிட்ட நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது.

அதிமுக அரசு இதுபோன்ற தரமில்லாமல் நடத்தும் பணிகளுக்கு டெண்டர் விட்டு இருப்பது கமிஷன் கலெக்ஷன் டைரக்ஷனில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது என்பதை சந்தேகத்திற்கு, இடமின்றி இந்த சம்பவம் உணர்த்தி இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

அமைச்சர்கள் முதல்அமைச்சர் உள்ளிட்டோர், அரசு கட்டிடங்களில் ஊழல் செய்வதால் இதுபோன்ற விபத்துகளில் சிக்கும் நோயாளிகள் சிகிச்சை பெற போகும் இடங்களில், கூட பாதுகாப்பாக இருக்க முடியாது என்ற ஒரு நிலை உருவாகி இருக்கிறது. என்பது கவலை அளிக்கிறது.

அதிமுக அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு ஊழலில் ஊறிப்போய் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார் மு க ஸ்டாலின்.

இந்த அவலம் எல்லாம் திமுக ஆட்சி அமையும் வரை தான். அதன் பிறகு எந்த ஒரு அமைச்சரும் அரசின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முடியாது என்று தெரிவித்திருக்கின்றார்.